China: நிலக்கரி சுரங்கத்தில் எரிவாயு வெடித்து விபத்து! 10 பேர் உயிரிழப்பு - காணாமல் போன 13 பேர்
சீனாவில் நிலக்கர் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழ்ந்துள்ளனர். நிலக்கரி மற்றும் எரிவாயு வெளியேற்றம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சீனாவிலுள்ள ஹெனான் மாகணத்தில் இருக்கும் பிங்டின்ஷான் பகுதியில் அமைந்திருக்கும் நிலக்கரி சுரக்கத்தில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மதியம் 2.55 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். சுரங்கத்தில் சிக்கியிருந்தவர்களில் சுமார் 6 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதையடுத்து காணாமல் போனர்வர்களை கண்டறியும் பணியும், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெடி விபத்து நிகழ்ந்த போது சுமார் 425 பேர் வரை சுரங்கத்தில் பணியாற்ற கொண்டிருந்ததாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்த நிலக்கரி சுரங்கத்தை அரசு அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். சீனாவில் இயங்கி வரும் சுரங்களில் இது போன்ற விபத்து சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதால், பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து ஊடகங்களில் தொடர்ந்து செய்தி வெளியாகி வந்துள்ளது.
மோசமான பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் சீரற்ற ஒழுங்குமுறை காரணமாகத்தான் தொழிற்சாலைகள், சுரங்கங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதுதொடர் கதையாகவே இருந்து வருகிறது.
சுரங்களில் நிகழ்ந்திருக்கும் விபத்துக்கள் தொடர்பாக வெளியான அறிக்கையில், சுமார் 168 சுரங்க விபத்துகளில் 245 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதம், வடகிழக்கு ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் ஜிக்சி நகரின் புறநகரில் பகுதியில் நடந்த சுரங்க விபத்தில் 12 பேர் உயிரிழந்துடன், 13 பேர் காயம் அடைந்துனர்.
அத்துடன், கடந்த நவம்பர் மாதத்தில் இந்த மாகாணத்தில் நிகழ்ந்த மற்றொரு நிலக்கரி சுரங்க விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். செப்டம்பர் மாதம் குய்சோ மாகாணத்தில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்