வயநாட்டில் இடைத்தேர்தல் அறிவிக்காதது ஏன்? தேர்தல் ஆணையர் சொன்ன பதில்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  வயநாட்டில் இடைத்தேர்தல் அறிவிக்காதது ஏன்? தேர்தல் ஆணையர் சொன்ன பதில்!

வயநாட்டில் இடைத்தேர்தல் அறிவிக்காதது ஏன்? தேர்தல் ஆணையர் சொன்ன பதில்!

Kathiravan V HT Tamil
Mar 29, 2023 01:17 PM IST

Wayanad Election: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலோடு சேர்த்து வயநாடு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி - தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி - தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

மேலும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி முடியும் என்றும், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 21ஆம் தேதி நடந்து அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 

மே 10ஆம் தேதி பதிவான வாக்குகள் அனைத்தும் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி தகுதிநீக்கம்

இந்த நிலையில் மோடி குறித்து பேசிய அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தியின் வயநாடு மக்களவை தொகுதி காலியாக உள்ளதாக மக்களவை செயலகத்தால் அறிவிக்கப்பட்டது. 

கர்நாடக தேர்தலோடு வயநாடு இடைத்தேர்தல்?

இதனால் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலோடு சேர்த்து வயநாடு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.

தேர்தல் ஆணையர் விளக்கம்

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான கால அவகாசம் 6 மாதங்களாகும். 

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த கீழமை நீதிமன்றம், மேல் முறையீட்டுக்கு ஏதுவாக அத்தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. ஆகியால் நாங்கள் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என தெரிவித்தார்.

Whats_app_banner
தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.