தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Army: உலகில் ராணுவ அமைப்பே இல்லாத நாடுகள் பற்றி தெரியுமா?

Army: உலகில் ராணுவ அமைப்பே இல்லாத நாடுகள் பற்றி தெரியுமா?

Karthikeyan S HT Tamil
May 26, 2023 06:40 AM IST

உலகில் ராணுவ அமைப்பு இல்லாத பெரிய நாடுகளும் உள்ளன. அது பற்றி இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...

ராணுவம்
ராணுவம்

ட்ரெண்டிங் செய்திகள்

ராணுவம் இல்லாதவை, அளவில் சிறிய நாடாக இருக்கும் என எண்ணத் தோன்றும் அல்லது பொருளாதாரத்தில் நலிந்திருக்கும் என கணிக்கப்படுகிறது. ஆனால், அவை உண்மை அல்ல. ராணுவ அமைப்பு இல்லாத பெரிய நாடுகளும் உள்ளன. அது பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

கிரிபாஸ்

ஆஸ்திரேலியா கண்ட பகுதியில் 33 தீவுகளை உள்ளடக்கிய நாடு. மத்திய பசிபிக் பெருங்கடலில் இருக்கிறது. இங்கும் நிலையான ராணுவ அமைப்பு கிடையாது. உள்நாட்டு பாதுகாப்புக்கு காவல்துறை செயல்படுகிறது. சிறிய அளவில் ஆயுதங்கள் மற்றும் ரோந்து படகுகளை பயன்படுத்துகிறது. பிரச்னை ஏற்பட்டால், ஆஸ்திரேலியா கண்ட பகுதியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாட்டு ராணுவங்கள் உதவும். இதற்காக ஒப்பந்த செய்துள்ளது இந்த நாடு.

ஐஸ்லாந்து

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஐஸ்லாந்து, வட அட்லாண்டிக் கடல் பகுதியில் உள்ளது. இயற்கை எழில் மிகுந்தது. ஏராளமான சுற்றுலா மையங்கள் உள்ளன. இந்த நாட்டில் கி.பி.,1869 முதல் நிலையான ராணுவம் இல்லை. இது நேட்டோ என்ற வட அட்லாண்டிக் நாடுகளின் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளது. அதன்படி, அமெரிக்காவுடன் ராணுவ ஒப்பந்தம் செய்துள்ளது. ராணுவம் தேவைப்பட்டால் அமெரிக்கா உதவி வருகிறது.

வனுவாட்டு

ஆஸ்திரேலியா கண்டத்தில் உள்ள மிகச்சிறிய தீவு நாடு. தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ளது. இங்கு 3 லட்சம் பேர் வசிக்கின்றனர். உள்நாட்டு பாதுகாப்புக்கு காவல்துறை உள்ளது. இந்த அமைப்பால் பாதுகாப்பை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால் மொபைல் போர்ஸ் என்ற அமைப்பு உதவும்.

கோஸ்டாரிகா

மத்திய அமெரிக்கா பகுதியில் உள்ளது. இந்த நாட்டின் அரசியல் அமைப்பு ராணுவத்திற்கு தடை விதித்துள்ளது. இருப்பினும் பெயரளவில் சிறிய ராணுவம் உள்ளது. அதில் பெரிய அளவில் ஆயுதங்கள் கிடையாது. ஆனால், உள்நாட்டு பாதுகாப்புக்கு காவல்துறை இருக்கிறது.

மொனாக்கோ

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்று. இங்கு நிலையான ராணுவம் கிடையாது. ராணுவ தேவை ஏற்பட்டால் பிரெஞ்சு படை உதவும். உள்நாட்டில் ஏதாவது பிரச்னை வந்தால் சமாளிக்க காவல்துறை உள்ளது.

மொரிசியஸ்

மொரிசியஸ் ஆப்பிரிக்கா கண்ட பகுதியில் உள்ள நாடு. இந்திய பெருங்கடலில் உள்ளது. இயற்கை வளங்கள் உடையது. சுற்றுலாவே பிரதான தொழில். இங்கு 1968 முதல் நிலையான ராணுவ அமைப்பு கிடையாது. உள்நாட்டு பாதுகாப்புக்கு 10 ஆயிரம் பேர் கொண்ட காவல்துறை செயல்படுகிறது. இவை தவிர 500 பேர் கடற்கரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு ராணுவத் தேவை ஏற்பட்டால் நம் கடற்படை உதவியை பெறுவர்.

பனாமா

மத்திய அமெரிக்க நாடு இது. இங்கு 1990-ல் ராணுவ அமைப்பு முற்றிலும் கைவிடப்பட்டது. தேசிய பாதுகாப்பு படை உள்ளது. உள்நாட்டு பாதுகாப்புக்கு காவல்துறை உள்ளது.

டோமினிக்

கரீபியன் பகுதியில் உள்ள மிகச்சிறிய தீவு நாடு. இங்கு 1981 முதல் நிலையான ராணுவம் கிடையாது. இது ரீஜினல் செக்யூரிட்டி சிஸ்டம் என்ற சர்வதேச பாதுகாப்பு திட்டத்தில் பாதுகாக்கப்படுகிறது. இந்த அமைப்பு கிழக்கு கரீபியன் தீவு பகுதியில் உள்ளது. இந்த அமைப்பு கிழக்கு கரீபியன் பகுதியில் பல நாடுகளை பாதுகாத்து வருகிறது.

ஜெயின்ட் லூசியா

கிழக்கு கரீபியன் தீவு நாடுகளில் ஒன்று. உள்நாட்டு பாதுகாப்புக்கு காவல்துறை அமைப்பு உள்ளது. இதில் சுமார் 116 பேர் மட்டுமே உள்ளனர். இந்த அமைப்பே நாட்டையும் பாதுகாத்து வருகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்