Chandigarh : மோசமான வானிலை.. சண்டிகரில் 17 விமானங்கள் ரத்து.. டெல்லிக்கு திருப்பி விடப்பட்ட 2 விமானம்!
சண்டிகரில் மோசமான வானிலை காரணமாக 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
மோசமான வானிலை காரணமாக ஷாஹீத் பகத் சிங் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மொத்தம் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பல விமானங்கள் மாற்றியமைக்கப்பட்டன. சில விமானம் புதுடெல்லிக்கு திருப்பி விடப்பட்டன என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோசமான வானிலை காரணமாக 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இது வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்ட விமானங்களில் எண்ணிக்கையை விட அதிகமாகும். சனிக்கிழமை மாலை, விமான நிலையத்தின் பார்வை 150 மீட்டராக இருந்தது.8 வருகை விமானங்களும், 9 புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
6இ-2177 (டெல்லி), 6இ-5261 (மும்பை), 6இ-867 (ஹைதராபாத்), 6இ-6634 (பெங்களூரு), 6இ-242 (புனே) விமானத்தின் வருகையும் ரத்து செய்யப்பட்டது. அகமதாபாத் (6இ-6395), கொல்கத்தா (6இ-6041), ஜெய்ப்பூர் (6இ-7413), புனே (6இ-681) ஆகிய நகரங்களுக்குச் செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
இதேபோல், புனேவுக்கு 6இ242, ஸ்ரீநகருக்கு 6இ6041, ஜெய்ப்பூருக்கு 6இ7414, ஜெய்ப்பூருக்கு 6இ2194(டெல்லி), 6இ6252 (ஹைதராபாத்), 6இ5233 (மும்பை), 6இ6385 (பெங்களூரு), 6இ6506 (அகமதாபாத்) ஆகிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோவா விமானம் 6இ724 மற்றும் டெல்லி விமானம் 91831 ஆகியவை டெல்லிக்கு திருப்பி விடப்பட்டன.
டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், லக்னோ, சென்னை, கோவா, அகமதாபாத், இந்தூர், லே மற்றும் துபாய் போன்ற நகரங்களுக்கு இந்த விமானங்கள் இயக்கப்பட்டன. டிசம்பர் 31 ஆம் தேதி காலை 5:45 மணி முதல் 8:30 மணி வரை ஆறு இண்டிகோ விமானங்களின் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்