Trump: கனடா விற்பனைக்கு அல்ல - நூதன தொப்பிகளை அணிந்து டிரம்பின் மிரட்டலை எதிர்க்கும் கனட மக்கள்
Trump: கனடா விற்பனைக்கு அல்ல - நூதன தொப்பிகளை அணிந்து டிரம்பின் மிரட்டலை எதிர்க்கும் கனட மக்கள் குறித்துப் பார்ப்போம்.

Trump: கனடா விற்பனைக்கு அல்ல என நூதன தொப்பிகளை அணிந்து டிரம்பின் மிரட்டலை எதிர்க்கும் கனட மக்கள் உடைய செயல்பாடு வைரல் ஆகியுள்ளது.
கனடாவுக்கு டொனால்ட் டிரம்பின் வாய்மொழி மிரட்டலைத் தொடர்ந்து, அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஒரு தனித்துவமான தொப்பியை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அது நிகழ்கால அரசியலைப் பேசுகிறது மற்றும் அமெரிக்காவின் அதிகார தலையிடலை எதிர்க்கிறது என்கின்றனர்.
கனடா நாட்டின் ஒட்டாவாவை தளமாகக் கொண்ட வடிவமைப்பு நிறுவனத்தின் நிறுவனர், லியாம் மூனி. அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், கனடா மீதான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டண வரிகள் உயர்வு மற்றும் கனடா அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக மாறும் என்ற மிரட்டலை நேரடியாக விடுத்தார்.
இந்நிலையில் அதை கனடாவைச் சேர்ந்த வடிவமைப்பு நிறுவனர் லியாம் மூனி, "கனடா விற்பனைக்கு இல்லை" என்று பொறிக்கப்பட்ட ஒரு தொப்பியை வெளியில் கொண்டு வந்தார்.
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பது குறித்த டிரம்பின் பரிந்துரைகள் கனடாவை நிலைகுலையச் செய்துள்ளன.
இதுதொடர்பாக கடந்த வாரம் ஒட்டாவாவில், கனட அமைச்சர்கள் நடத்திய சந்திப்பில், ஒன்ராறியோ என்பவர் ஒரு தொப்பிய அணிந்ததைக் கண்ட பின்னர் இந்த தொப்பிகள் கவனத்திற்கு வந்தன.
பல்லாயிரக்கணக்கான தொப்பிகள் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக மூனி கூறியுள்ளார். அதற்குக் காரணம் வேறு ஒன்றும் அல்ல. அதில் கனடா விற்பனைக்கு அல்ல என பொறிக்கப்பட்டிருந்தது. இதுதான் கனடா மக்களை இப்படி ஒரு தொப்பி அணியும் எண்ணத்தை தூண்டியிருக்கிறது.
‘மக்களை ஒன்றிணைக்க இது ஒரு வாய்ப்பு’:
இதுதொடர்பாக மூனி ராய்ட்டர்ஸிடம் கூறியதாவது, கனட தேசியவாதத்தைத் தூண்டும் வகையிலும், அரசியல் பிரிவுகளைக் களையவும், டிரம்பின் மிரட்டலுக்கு ஒரு ஆக்கபூர்வமான பதிலடியாகவும் இப்படி ஒரு தொப்பியை உருவாக்கியதாகக் கூறினார்.
இதுதொடர்பாக மூனி கூறுகையில், "அரசியல் தூண்டுதலைப் பொருட்படுத்தாமல், கனடாவின் அனைத்து சமூகத்திலிருந்தும் மக்களை ஒன்றிணைக்க இது ஒரு வாய்ப்பு" என்று கூறினார்.
ஃபாக்ஸ் நியூஸில் ஃபோர்டின் சமீபத்திய நேர்காணல்களில் ஒன்றைப் பார்த்த பிறகு தனது வணிக கூட்டாளருடன் சேர்ந்து தொப்பிகளை வடிவமைத்ததாக மூனி தெரிவித்து இருக்கிறார்.
அமெரிக்கா மற்றும் கனட இணைப்பை, கனடா அமெரிக்காவுடன் இணைவது ஒரு "சலுகை" என்று பரிந்துரைத்த கனட அமைச்சர்களைக் கொண்ட குழுவினருக்கு, கனடா விற்பனைக்கு இல்லை என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்து இருந்தார்.
டிரம்பின் அரசியல் கணக்கு:
கடந்த வாரம் சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் வீடியோ மூலம் பேசிய டிரம்ப், கனடாவிடம் மரியாதையை எதிர்பார்ப்பதாகக் கூறினார். முன்னதாக அவர் கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோவை "ஆளுநர்" என்று கூட குறிப்பிட்டார்.
இதுதொடர்பாகப் பேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் நிறுவனர், லியாம் மூனி,"நமது கௌரவம் அவமதிக்கப்படும்போது நமது இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எங்களுக்கு கூட்டாளிகள் உள்ளனர். உலகெங்கிலும் எங்களுக்கு நண்பர்கள் உள்ளனர். அவர்கள் எங்கள் அழைப்புக்கு எழுந்து எங்களைப் பாதுகாக்கவும் அதில் சேரவும் தயாராக உள்ளனர்"என்றார்.
கனடாவை அமெரிக்காவுடன் சேர்க்க "பொருளாதார பலத்தை" பயன்படுத்தவும் ட்ரம்ப் முன்னதாக அச்சுறுத்தினார்.
கனடாவை அதன் 51ஆவது மாநிலமாக அமெரிக்காவுடன் இணைக்க தனது விருப்பத்தை அவர் பலமுறை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்குப் பிறகு மார்-ஏ லாகோ ரிசார்ட்டில் அப்போதைய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவரைப் பார்வையிட்டபோதுகூட, ட்ரூடோவிடம் இது குறித்து கேட்கப்பட்டது.
ட்ரூடோ பின்னர் ஒரு சமூக ஊடக பதிவில், "கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறுவதற்கு ஒரு துளி அளவு வாய்ப்பு இல்லை" என்று வலியுறுத்தினார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்