Ujjwala: பிரதமரின் உஜ்வாலா திட்டம்! மகளிர் தின சர்ப்ரைஸ் அறிவித்த மோடி!
”2024-25 ஆம் ஆண்டிற்கு பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா நுகர்வோருக்கு 300 ரூபாய் மானியத்தை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்”
2024-25 ஆம் ஆண்டிற்கான பிரதமர் உஜ்வாலா யோஜனா நுகர்வோருக்கு 300 மானியம் தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். பயனாளிகள் நேரடியாக அவர்களின் கணக்கில் மானியத்தைப் பெறுவார்கள் என்று கூறினார்.
2024-25 ஆம் ஆண்டிற்கான மொத்த செலவு ரூ.12,000 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச மகளிர் தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கோயல் கூறினார்.
2023-24 முதல் 2025-26 வரை மூன்று ஆண்டுகளில் 75 லட்சம் எல்பிஜி இணைப்புகளை வெளியிடுவதற்கான பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை நீட்டிக்க கடந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 75 லட்சம் கூடுதல் உஜ்வாலா இணைப்புகளை வழங்குவதன் மூலம் PMUY பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை 10.35 கோடியாக உயரும்.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) நாடு முழுவதும் உள்ள ஏழை வீடுகளுக்கு சுத்தமான சமையல் எரிபொருளை வழங்கும் நோக்கத்துடன் மே 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. PMUY இன் கீழ், ஏழை குடும்பங்களைச் சேர்ந்த வயது வந்த பெண்களுக்கு டெபாசிட் இல்லாத எல்பிஜி இணைப்பு வழங்கப்படுகிறது.
டாபிக்ஸ்