அடேங்கப்பா.. இந்த எருமை 23 கோடியாம்.. போஷாக்கான உணவு தான் கொடுப்பாங்களாம்.. விற்க விரும்பவில்லை என சொன்ன உரிமையாளர்!
அன்மோல் உரிமையாளர் பல்மிந்த்ரா கில். இவர் எருமைகளை விற்க விரும்பவில்லை என்று கூறினார். இருப்பினும் ஒருவர் அன்மோலை வாங்க ரூ.23 கோடி செலவழிக்க விருப்பம் தெரிவித்து அவரை அணுகினார்.

புஷ்கர் சர்வதேச கால்நடை கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள 1500 கிலோ எடையுள்ள எட்டு வயது எருமை மாடு, நிகழ்ச்சியில் கூடியிருந்த அனைவரின் கண்களையும் ஈர்க்க செய்துள்ளது. ஹரியானாவைச் சேர்ந்த ‘அன்மோல்’ என்ற எருமை பார்க்க பளபளவென இருக்கும். இந்த எருமை மற்ற எல்லா விலங்குகளையும் விட உயர்ந்தது.
ராஜஸ்தானின் புஷ்கர் விழாவின் போது அங்குள்ள சந்தையில் கால்நடைகளை மக்கள் ஏலம்விடுவது வழக்கம். இங்கு குதிரைகளெல்லாம் கோடி ரூபாய் வரை ஏலம் விடப்படும் என சொல்லப்படுகிறது. ஆனால் அந்த குதிரைகள், மற்ற விலங்குகளையெல்லாம் விட இந்த அன்மோலைப் பார்க்கத்தான் கூட்டம் கூடுகிறதாம்.
ரூ.23 கோடி செலவழிக்க விருப்பம்
அன்மோல் உரிமையாளர் பல்மிந்த்ரா கில். இவர் எருமைகளை விற்க விரும்பவில்லை என்று கூறினார். இருப்பினும் ஒருவர் அன்மோலை வாங்க ரூ.23 கோடி செலவழிக்க விருப்பம் தெரிவித்து அவரை அணுகினார். சனிக்கிழமை தொடங்கிய புஷ்கர் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள ஒட்டகங்கள், எருமைகள் மற்றும் குதிரைகளைப் பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் வருகின்றனர்.