Income Tax: ’12 லட்சம் வரை வருமான வரி இல்லை!’ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி!
Budget 2025: 12 லட்சம் வரை வருமான வரி கிடையாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.

Income Tax: ’12 லட்சம் வரை வருமான வரி இல்லை!’ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி! (Sansad TV)
Budget 2025: 12 லட்சம் வரை வருமான வரி கிடையாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார். 75,000 நிலையான விலக்கு காரணமாக சம்பளம் பெறும் வரி செலுத்துவோருக்கு இந்த வரம்பு 12.75 லட்சமாக இருக்கும்.
“அனைத்து வரி செலுத்துவோருக்கும் பயனளிக்கும் வகையில் வரி விகிதங்கள் விகிதங்கள் மாற்றப்படுகின்றன. இந்த புதிய அறிவிப்பு நடுத்தர மக்களின் வரிகளை கணிசமாகக் குறைத்து, அவர்களின் கைகளில் அதிக பணத்தை புழங்க செய்யும்” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
புதிய வருமான வரி விகிதங்கள்:-
ரூ.0-ரூ 4 லட்சம் - இல்லை
ரூ.4 லட்சம் - ரூ 8 லட்சம் - 5 %
ரூ.8 முதல் ரூ 12 லட்சம்: 10%
ரூ.8 முதல் ரூ 16 லட்சம் வரை- 15 %
ரூ.16 முதல் ரூ 20 லட்சம்- 20%
ரூ.20 லட்சம்- ரூ 24 லட்சம் - 25%
ரூ.24 லட்சத்திற்கு மேல்- 30%

டாபிக்ஸ்
தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.