Budget 2025: பட்ஜெட் எதிரொலி! உடனடியாக விலை குறையும் பொருட்கள் என்ன? விலை உயரும் பொருட்கள் எது?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Budget 2025: பட்ஜெட் எதிரொலி! உடனடியாக விலை குறையும் பொருட்கள் என்ன? விலை உயரும் பொருட்கள் எது?

Budget 2025: பட்ஜெட் எதிரொலி! உடனடியாக விலை குறையும் பொருட்கள் என்ன? விலை உயரும் பொருட்கள் எது?

Kathiravan V HT Tamil
Feb 01, 2025 01:12 PM IST

Budget 2025: நிதியமைச்சராக பொறுப்பேற்று நிர்மலா சீதாராமன் 8வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், விவசாயம், உற்பத்தி, வேலை வாய்ப்பு, சிறு குறு நடுத்தரத் தொழில்கள், கிராமப்புற மேம்பாடு, புத்தாக்கம் உள்ளிட்டவைகளில் அரசு கவனம் செலுத்தும் என நிர்மலா சீதாராமன் கூறினார்.

Budget 2025: பட்ஜெட் எதிரொலி! உடனடியாக விலை குறையும் பொருட்கள் என்ன? விலை உயரும் பொருட்கள் எது?
Budget 2025: பட்ஜெட் எதிரொலி! உடனடியாக விலை குறையும் பொருட்கள் என்ன? விலை உயரும் பொருட்கள் எது? (Sansad TV)

பட்ஜெட் கூட்டத் தொடர்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 13 ஆம் தேதி வரையும், பின்னர் மார்ச் 10ஆம் தேதி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரையும் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

இனிப்பு கலந்த தயிரை ஊட்டிய ஜனாதிபதி

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன், நிர்மலா சீதாராமன் மற்றும் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி ஆகியோர் ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்தனர். ஜனாதிபதி திரௌபதி முர்மு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ருக்கு 'இனிப்பு கலந்த தயிரை' ஊட்டி வாழ்த்து தெரிவித்தார்.

நிதியமைச்சராக பொறுப்பேற்று நிர்மலா சீதாராமன் 8வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், விவசாயம், உற்பத்தி, வேலை வாய்ப்பு, சிறு குறு நடுத்தரத் தொழில்கள், கிராமப்புற மேம்பாடு, புத்தாக்கம் உள்ளிட்டவைகளில் அரசு கவனம் செலுத்தும் என நிர்மலா சீதாராமன் கூறினார். ”இந்த பட்ஜெட் சீர்திருத்தங்களை செய்வதை நோக்கமாக கொண்டு உள்ளது” என்று கூறினார். 

விலை குறையும் பொருட்கள்

  • புற்றுநோய் மற்றும் அரிதான நோய்களுக்கான 36 மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு.
  • 37 மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரி விலக்கு.
  • கோபால்ட் தயாரிப்பு, எல்இடி, துத்தநாகம், லித்தியம் அயன் பேட்டரி ஸ்கிராப் மற்றும் 12 முக்கியமான தாதுப்பொருட்களுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து முழு விலக்கு.
  • 10 ஆண்டுகளுக்கு கப்பல்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களுக்கு அடிப்படை சுங்க வரி விலக்கு.
  • மீன் பாஸ்டுரி மீதான அடிப்படை சுங்க வரி 30 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும்.
  • கைவினைப் பொருட்கள் ஏற்றுமதியை மேலும் ஊக்குவிக்கும் திட்டம் அறிவிப்பு
  • ஈரமான நீல நிற தோலுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து அரசாங்கம் முழுமையாக விலக்கு அளிக்கும்.

விலை உயரும் பொருட்கள்

  • தொடுதிரை பேனல்களுக்கான அடிப்படை சுங்க வரியை 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Whats_app_banner
தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.