Budget 2025: திருமணம் ஆன தம்பதிகளுக்கு புதிய வரிமுறையை அறிமுகம் செய்ய ICAI பரிந்துரை! பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Budget 2025: திருமணம் ஆன தம்பதிகளுக்கு புதிய வரிமுறையை அறிமுகம் செய்ய Icai பரிந்துரை! பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா?

Budget 2025: திருமணம் ஆன தம்பதிகளுக்கு புதிய வரிமுறையை அறிமுகம் செய்ய ICAI பரிந்துரை! பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா?

Kathiravan V HT Tamil
Feb 01, 2025 08:59 AM IST

Budget 2025: திருமணம் ஆன தம்பதிகளுக்கு விதிக்கப்படும் கூட்டு வரிமுறை, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இது போன்றே இந்தியாவிலும் திருமணமான தம்பதிகள், தங்கள் வருமானத்தை வரிச்சலுகைக்காக இணைப்பதற்கான விருப்பத்தை இந்த வரிமுறை வழங்குகிறது.

Budget 2025: திருமணம் ஆன தம்பதிகளுக்கு புதிய வரிமுறையை அறிமுகம் செய்ய ICAI பரிந்துரை! பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா?
Budget 2025: திருமணம் ஆன தம்பதிகளுக்கு புதிய வரிமுறையை அறிமுகம் செய்ய ICAI பரிந்துரை! பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா?

இன்று தாக்கல் ஆகும் பட்ஜெட்

இன்றைய தினம் காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மக்களவையில் 8வது முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இதுவரை 6 முழு பட்ஜெட் மற்றும் 2 இடைக்கால பட்ஜெட்டுகளை அவர் தாக்கல் செய்து உள்ளார்.

பட்ஜெட் உரையின் போது, வரவிருக்கும் நிதியாண்டிற்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் மற்றும் வருவாய் எதிர்பார்ப்புகளை நிர்மலா சீதாராமன் மக்களவையில் கோடிட்டுக் காட்டுவார். கீழ்சபையில் பட்ஜெட் உரை நடந்து முடிந்த பிறகு, பட்ஜெட் ஆவணங்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி தேசிய பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தைகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ICAI பரிந்துரை

முன்னதாக, இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) திருமணமான தம்பதிகளுக்கு 'கூட்டு வரிவிதிப்பு' முறையை நடைமுறைபடுத்த பரிந்துரை செய்து உள்ளது. திருமணம் ஆன தம்பதிகளுக்கு விதிக்கப்படும் கூட்டு வரிமுறை, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இது போன்றே இந்தியாவிலும் திருமணமான தம்பதிகள், தங்கள் வருமானத்தை வரிச்சலுகைக்காக இணைப்பதற்கான விருப்பத்தை இந்த வரிமுறை வழங்குகிறது. 

தற்போது தனிநபர் வருமான வரி விலக்கு 7 லட்சம் ரூபாயாக உள்ளது. இதுவே திருமணமானவராக இருந்தால் குடும்பத்திற்கு வருமான வரி விலக்காக 14 லட்சம் ரூபாயாக இருக்கும் வகையில் பரிந்துரைகளை ஐ.சி.ஏ.ஐ அமைப்பு செய்து உள்ளது. 

இந்த பரிந்துரைகளை இன்று வெளியாகும் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படுமா என அறிமுகப்படுத்துவீர்களா? பட்டய கணக்காளர் சிராக் சவுகான் ’எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். 

பரிந்துரை என்ன?

திருமணம் ஆன தம்பதிகள் தனிநபர்களாகவோ அல்லது கூட்டாகவோ வருமானவரியை தாக்கல் செய்யும் விருப்பத்தை ஐ.சி.ஏ.ஐ அமைப்பு முன்மொழிந்து உள்ளது.

முன்மொழியப்பட்ட வரி அடுக்குகள் என்ன?

ரூ.6 லட்சம் வரை (ஆண்டு வருமானம்): வரி இல்லை

ரூ.6 லட்சம்-14 லட்சம்: 5 சதவீத வரி

ரூ.14 லட்சம்-20 லட்சம்: 10 சதவீத வரி

ரூ.20 லட்சம்-24 லட்சம்: 15 சதவீத வரி

ரூ.24 லட்சம்-30 லட்சம்: 20 சதவீத வரி

ரூ.30 லட்சத்திற்கும் மேல்: 30 சதவீத வரி

கூடுதலாக, கூட்டு தாக்கல் முறையின் கீழ், அடிப்படை விலக்கு வரம்பு ரூ .3 லட்சத்தில் இருந்து ரூ .6 லட்சமாக இரட்டிப்பாக்கப்படும். மேலும், கூடுதல் கட்டண வரம்பை ரூ .50 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்த ஐ.சி.ஏ.ஐ பரிந்துரைத்து உள்ளது.

திருமணமான தம்பதிகளுக்கான தற்போதைய வரி முறை

தற்போது, கணவனும் மனைவியும் தனித்தனியாக வரி தாக்கல் செய்கிறார்கள், இதன் விளைவாக ஒருவர் மற்றவரை விட அதிகமாக சம்பாதிக்கும்போது அதிக வரி விதிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் சம்பளம் பெறும் குடும்பங்களில் இந்த வரிமுறை உகந்ததாக இருக்கும். ஏனெனில் ஒவ்வொரு நபரும் தனித்தனியாக வருமானவரி விலக்குகளை கோரலாம். மறுபுறம், கணவன் அல்லது மனைவி ஆகிய ஏதேனும் ஒருநபரின் வருமானத்தை மட்டுமே கொண்ட குடும்பங்கள் இந்த நன்மைகளை இழக்கின்றன.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.