Budget 2025: இன்று மத்திய பட்ஜெட்! 8வது முறையாக தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்! இனிக்குமா? கசக்குமா?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Budget 2025: இன்று மத்திய பட்ஜெட்! 8வது முறையாக தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்! இனிக்குமா? கசக்குமா?

Budget 2025: இன்று மத்திய பட்ஜெட்! 8வது முறையாக தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்! இனிக்குமா? கசக்குமா?

Kathiravan V HT Tamil
Feb 01, 2025 07:14 AM IST

Budget 2025: இன்றைய தினம் காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மக்களவையில் 8வது முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இதுவரை 6 முழு பட்ஜெட் மற்றும் 2 இடைக்கால பட்ஜெட்டுகளை அவர் தாக்கல் செய்து உள்ளார்.

Budget 2025: இன்று மத்திய பட்ஜெட்! 8வது முறையாக தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்! இனிக்குமா? கசக்குமா?
Budget 2025: இன்று மத்திய பட்ஜெட்! 8வது முறையாக தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்! இனிக்குமா? கசக்குமா?

பட்ஜெட் கூட்டத் தொடர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்றைய தினம் (31-01-2025) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை உடன் தொடங்கியது. நேற்று பிற்பகலில் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையையும் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அடுத்து வரும் 2025-26ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 6.3% முதல் 6.8% வரை இருக்கும் என்று கணித்துள்ளது. 2047ஆம் ஆண்டுக்குள் ’வளர்ச்சி அடைந்த இந்தியா’ என்ற இலக்கை அடைய தேவைப்படும் ஆண்டுக்கு 8 % ஜிடிபி இலக்கை எட்ட வேண்டும் என்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

8வது முறையாக பட்ஜெட் வாசிக்கும் நிர்மலா சீதாராமன்

இன்றைய தினம் காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மக்களவையில் 8வது முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இதுவரை 6 முழு பட்ஜெட் மற்றும் 2 இடைக்கால பட்ஜெட்டுகளை அவர் தாக்கல் செய்து உள்ளார்.

பட்ஜெட் உரையின் போது, வரவிருக்கும் நிதியாண்டிற்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் மற்றும் வருவாய் எதிர்பார்ப்புகளை நிர்மலா சீதாராமன் மக்களவையில் கோடிட்டுக் காட்டுவார். கீழ்சபையில் பட்ஜெட் உரை நடந்து முடிந்த பிறகு, பட்ஜெட் ஆவணங்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி தேசிய பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தைகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் சொல்வது என்ன?

பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பாக நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, செல்வம் பெற ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு செல்வங்களை வழங்க லட்சுமி தேவியை பிரார்த்திக்கிறேன். வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை எட்ட இந்த பட்ஜெட் புதிய ஆற்றலை வழங்கும். பெண்களின் சம உரிமையை உறுதி செய்யும் முக்கிய முடிவுகள் நடப்புத் தொடரில் எடுக்கப்படும் என்று பிரதமர் கூறினார்.

பட்ஜெட் எதிர்பார்ப்புகள்:-

வருமான வரி செலுத்தும் விதிகளில் மாற்றங்கள் மற்றும் சலுகைகள் கிடைக்குமா என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது. தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் பெறுவதற்கான அறிவிப்புகள் பட்ஜெட் உரையில் இடம்பெற வேண்டும் என்பது பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறை

நடப்பு பட்ஜெட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்து நிறைய அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI), கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் குவாண்டம் தொழில்நுட்பங்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. AI/GenAI சிறப்பு மையங்களின் ஆதரவுடன். 8.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் மார்ச் IndiaAI மிஷன் மூலம் இந்தியாவில் AI உருவாக்கும் திட்டம் குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என கூறப்படுகிறது.

எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி

இந்தியாவின் ஹார்டுவேர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். மின்னணு உதிரிபாகங்களுக்காக ரூ.25,000 கோடி மதிப்பிலான உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டத்தை அரசாங்கம் தொடங்கலாம்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.