Online Gambling: ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் வேண்டாம் - கடிதம் அனுப்பிய மத்திய அரசு
ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ஒளிபரப்புத் துறை அமைச்சக செயலாளர் கடிதம் எழுதி உள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் பல இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளனர். இந்த விளையாட்டுகளில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களும் இங்கு உள்ளனர்.
அதனால் இந்த விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் எனப் பலர் கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது வரை நாடு முழுவதும் பல மாநிலங்களில் இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் பல உயிரிழப்புகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.
இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டம் குறித்த விபரங்களை வெளியிடும் ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் மீது ஒரே நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை கொடுத்துள்ளது.
இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டத்தின் காரணமாகப் பல மாநிலங்களில் தற்கொலைகள் அரங்கேறி வருகின்ற காரணத்தினால் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இது குறித்து எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி மற்றும் அக்டோபர் இரண்டாம் தேதிகளில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை வெளியிடக் கூடாது என அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால் ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்துத் தொடர்ந்து விளம்பரங்கள் பல வெளியாகி இருந்தன.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களைத் தடுக்கும் வகையில் அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சக செயலாளர் அபூர்வ சந்திரா கடிதம் எழுதியுள்ளார்.
அதில் ஆன்லைன் பந்தயங்கள் மற்றும் சூதாட்டம் சட்டவிரோதம் என நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுக்கு நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி வெளியிட்டார்கள் இந்த ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை வெளியிடக் கூடாது.
இணையதளங்கள் மட்டுமின்றி காட்சியை மற்றும் அச்சு ஊடகங்களும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சமூகம் மற்றும் நீதி சிக்கல்களையும் இந்த ஆன்லைன் சூதாட்டங்கள் ஏற்படுத்துகின்றன. இது போன்ற பிரச்சனைகளைத் தடுப்பதற்காகவே ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாம் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிப்புற விளம்பர சுவரொட்டிகள், விளம்பர தட்டுகள், பேனர்கள் ஆகியவை மூலம் சூதாட்ட விளம்பரங்கள் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்