
Tamil Live News Updates: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்!
Tamil Live News Updates: இன்றைய (19.09.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
Tue, 19 Sep 202312:29 PM IST
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் - அங்கீகாரம் அவசியம்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு சங்கங்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்று இருக்க வேண்டும்; அங்கீகாரம் பெற்ற மாநில விளையாட்டு சங்கங்கள் மற்றும் தொடர்புடைய அகில இந்திய சம்மேளனம் வழங்கிடும் சான்றிதழ்கள் மட்டுமே பொறியியல், பிற தொழில்முறை படிப்புகளில், 3% விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு மற்றும் உயரிய ஊக்க தொகை வழங்கிட பரிசீலிக்கப்படும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலாளர் மேக்நாத் ரெட்டி அறிவிப்பு
Tue, 19 Sep 202311:01 AM IST
தங்கபசை பறிமுதல்
இலங்கையில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 2.2 கோடி மதிப்புடைய 4 கிலோ தங்கப் பசை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
Tue, 19 Sep 202311:00 AM IST
என்கவுண்டர் வழக்கு மாற்றம்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் போலீஸ் என்கவுண்டரில் இருவர் கொல்லப்பட்ட வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Tue, 19 Sep 202310:59 AM IST
'அதிமுகவினர் எங்கு முகத்தை வைப்பார்கள்’ - கீதாஜீவன் கேள்வி
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயணாளிகளுக்கு பணம் வழங்குவது தொடர்பாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தார்கள்; ஆனால் இப்போது எங்கு கொண்டு முகத்தை வைப்பார்கள் - அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
Tue, 19 Sep 202310:58 AM IST
மாவட்ட சிறை அதிகாரிக்கு 4 வாரம் சிறை
தூத்துக்குடியில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட கல்வி அதிகாரிக்கு 4 வாரம் சிறை தண்டனை, 1000 அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
Tue, 19 Sep 202310:14 AM IST
‘நாரி சக்தி வந்தன் என பெயர்
மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ‘நாரி சக்தி வந்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
Tue, 19 Sep 202309:58 AM IST
புதிய தொடக்கத்தின் சின்னம் - மோடி
“புதிய நாடாளுமன்ற வளாகம், புதிய கட்டடம் மட்டுமல்ல, புதிய தொடக்கத்தின் சின்னமும் கூட, இந்த புதிய கட்டடம் 140 கோடி இந்தியர்களுக்கு புதிய நம்பிக்கையைத் தரும்''-மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரை
Tue, 19 Sep 202309:34 AM IST
பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல்
பழைய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு சம்விதன் சதன் என்று பெயர் மாற்ற மக்களவைத்தலைவர் ஓம்பிர்லா ஒப்புதல்
Tue, 19 Sep 202308:59 AM IST
மகளிர் இடஒதுக்கீடு மசோதா- நாளை முதல் விவாதம்
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது நாளை மக்களவையில் விவாதம் தொடங்குகிறது
Tue, 19 Sep 202308:57 AM IST
மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா வியாழனில் தாக்கல்
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா வரும் விழாயன் அன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்
Tue, 19 Sep 202308:45 AM IST
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்!
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை அமைச்சர் அர்ஜூன்ராம் மக்களவையில் தாக்கல் செய்தார்
Tue, 19 Sep 202308:25 AM IST
செங்கோல் பெருமைக்குரியது - மோடி
நேருவிடம் கொடுக்கப்பட்ட செங்கோல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இடம்பெற்று இருப்பது பெருமைக்குரியது - புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் பிரதமர் மோடி பேச்சு
Tue, 19 Sep 202308:24 AM IST
இன்று தாக்கல் ஆகும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா
மகளிர் இடஒதுக்கீடு மசோதா இன்றே புதிய நாடாளுமன்றக் கட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு
Tue, 19 Sep 202307:49 AM IST
புதிய நாடாளுமன்றத்தில் முதல் கூட்டம்
டெல்லியில் புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் தேசிய கீதத்துடன் தொடங்கியது
Tue, 19 Sep 202307:26 AM IST
நீட் தேர்வு தேதி அறிவிப்பு
2024-2025 இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே 5-ல் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
Tue, 19 Sep 202307:14 AM IST
இணையதள சேவை பாதிப்பு
மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப நிலையை அறிவதற்கான இணையதள சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Tue, 19 Sep 202306:50 AM IST
பிரேத பரிசோதனை முடிந்தது
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் உடலுக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தடயவியல் மற்றும் காவல்துறை அதிகாரிகள், மீராவின் தோழி உள்ளிட்டோர் விஜய் ஆண்டனியின் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர்.
Tue, 19 Sep 202306:39 AM IST
டிடிஎஃப் வாசன்
"நடந்தது எதிர்பாராத விபத்து, ஸ்டண்ட் செய்யவில்லை, பைக்கில் இருந்து ஸ்லிப் ஆகி கீழே விழுந்து விட்டேன் - டிடிஎஃப் வாசன் பேட்டி
Tue, 19 Sep 202306:32 AM IST
பிரதமர் மோடி பேச்சு
"புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு இன்று இடம்பெயர்வது புதிய எதிர்காலத்திற்கான தொடக்கம். அரசியல் சாசனத்திற்கு பழைய நாடாளுமன்ற கட்டடத்தின்தான் வடிவம் கொடுக்கப்பட்டது. பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் 4000 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது." பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு விடைகொடுக்கும் நிகழ்வில் பிரதமர் மோடி பேச்சு
Tue, 19 Sep 202305:35 AM IST
உதவி மையங்கள்
சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான உதவி மையங்கள் செயல்பட தொடங்கியது. சென்னை மாநகராட்சி அலுவலகம் மற்றும் மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்களிலும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
Tue, 19 Sep 202305:33 AM IST
மகளிர் உரிமைத்தொகை - சரிபார்க்க இணையதளம் தொடக்கம்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பத்தின் நிலையை அறிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.1000 கிடைக்கப்பெறாதவர்கள் WWW.kmt.tn.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்க்கலாம். குடும்ப அட்டை எண்ணை பதிவிட்டு விண்ணப்பத்தின் நிலையை அறிய முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Tue, 19 Sep 202305:29 AM IST
கனடா தூதரக அதிகாரி வெளியேற உத்தரவு
இந்திய தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றியதற்கு பதிலடியாக கனடா தூதரக அதிகாரி இந்தியாவை விட்டு 5 நாட்களில் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் மரணத்தில் இந்தியாவின் பங்கு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டிய சில மணிநேரங்களிலேயே இந்தியாவின் தூதரக அதிகாரி கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
Tue, 19 Sep 202304:37 AM IST
கர்நாடகாவுக்கு தண்ணீர் தர எண்ணம் இல்லை
கர்நாடகாவிடம் தண்ணீர் இருக்கிறது. ஆனால், காவிரி நீர் தர மறுக்கிறது. கர்நாடகாவுக்கு தண்ணீர் தர எண்ணம் இல்லை என்று டெல்லியில் மத்திய அமைச்சர் ஷெகாவத்தை சந்தித்த பிறகு அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Tue, 19 Sep 202304:28 AM IST
மத்திய அமைச்சருடன் தமிழக எம்பிக்கள் சந்திப்பு
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத்தை, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் சந்தித்தனர். திமுக எம்.பி., டி.ஆர்.பாலு, காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி, அதிமுக எம்.பி., தம்பிதுரை, மதிமுக எம்.பி., வைகோ, வி.சி.க எம்.பி., திருமாவளவன், பாமக எம்.பி., அன்புமணி உள்ளிட்ட 12 பேர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
Tue, 19 Sep 202304:26 AM IST
விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்
தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி திருவாரூரில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Tue, 19 Sep 202303:45 AM IST
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட்டது கர்நாடகா
கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழகத்துக்கு 15 நாட்களு்ககு வினாடிக்கு 5000 கனஅடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் நேற்று உத்தரவிட்ட நிலையில், தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
Tue, 19 Sep 202303:42 AM IST
உணவங்களில் ஆய்வு மேற்கொள்ள அமைச்சர் உத்தரவு
ஷவர்மா, க்ரில் சிக்கன் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு நடத்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
Tue, 19 Sep 202303:11 AM IST
யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது
பைக் வீலிங் செய்து விபத்தில் சிக்கிய நிலையில், பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tue, 19 Sep 202302:51 AM IST
கணவன், மனைவி பலி
வேலூர், கணியம்பாடியில் உள்ள செங்கல் சூளைக்கு அருகே தூங்கியபோது மழை காரணமாக வெளியேறிய புகையால் மூச்சுத்திணறி தெய்வசிகாமணி (40), அவரது மனைவி அமுல் (30) ஆகியோர் பலியாகினர்.
Tue, 19 Sep 202302:24 AM IST
வானிலை நிலவரம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tue, 19 Sep 202302:59 AM IST
நடிகர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 12-ம் வகுப்பு படித்து வந்த மீராமன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Tue, 19 Sep 202301:09 AM IST
உரிமைத் தொகை - உதவி மையங்கள்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான உதவி மையங்கள் இன்று முதல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் நாளை முதல் உதவி மையம் செயல்படுகிறது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பயனாளிகள் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.
Tue, 19 Sep 202301:08 AM IST
மாணவி தற்கொலை
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார். நடப்பாண்டில் இந்நகரத்தில் போட்டித்தேர்வு பயிற்சி மாணவர்கள் தற்கொலை எண்ணிக்கை சுமார் 26 ஆக பதிவாகியுள்ளது.
Tue, 19 Sep 202301:06 AM IST
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
சென்னையில் 486-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.