Tamil News  /  Nation And-world  /  Breaking News Live Updates 18 September 2023 Get Tamil Latest News Liveblog

பிரேக்கிங் நியூஸ் அப்டேட்ஸ்

Tamil Live News Updates: பாஜக உடன் கூட்டணியில் இல்லை -டி.ஜெயக்குமார்

04:45 PM ISTHT Tamil Desk
  • Share on twitter
  • Share on Facebook
04:45 PM IST

Tamil Live News Updates: இன்றைய (18.09.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Mon, 18 Sep 202312:23 PM IST

2 சிறுவர்கள் உயிரிழப்பு

மேட்டூரில் காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

Mon, 18 Sep 202311:20 AM IST

நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா விற்க தடை

நாமக்கல் மாவட்டம் பரமத்தி சாலையில் உள்ள உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஷவர்மா தயாரிக்க தடை விதித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

Mon, 18 Sep 202311:16 AM IST

செப்.26-இல் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டத்தை வரும் செப்டம்பர் 26ஆம் தேதி அன்று நடத்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முடிவு

Mon, 18 Sep 202310:30 AM IST

5000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவு

தமிழ்நாட்டிற்கு 5,000 கன அடி தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

Mon, 18 Sep 202310:03 AM IST

’பாதிப்பேருக்கு மேல் சிறை செல்ல வேண்டி வரும்’ டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து

“இது அதிமுகவின் இறுதி முடிவாக நான் பார்க்கவில்லை; அதிமுக பாஜகவுக்கு அடிமைப்பட்டு அச்சப்பட்டு இருக்கும் கட்சி. இது ஜெயக்குமார் பேசி இருக்கலாமே தவிர எடப்பாடி பேசுவாரா என்பது எனக்கு தெரியவில்லை. கட்டாயமாக பாஜக கூட்டணியில் இருந்து இவர்கள் விலகுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அப்படி விலகினால் இவர்கள் பாதிப்பேருக்கு மேல் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகும்” - திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து 

Mon, 18 Sep 202309:34 AM IST

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகல் - திருமா கருத்து

அதிமுக விலகல் என்பது பாஜக தலைமையின் கவனத்தை ஈர்பதற்காக சொல்லப்பட்டதா? அல்லது அதிமுகவின் தன்மானத்தை தக்க வைப்பதற்காக சொல்லப்பட்டதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் - விசிக தலைவர் திருமாவளவன் 

Mon, 18 Sep 202309:09 AM IST

பாஜக கால் ஊன்றவே முடியாது - டி.ஜெயக்குமார்

உங்களை சுமக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அண்ணாமலைக்கு இங்கு காலே கிடையாது. பாஜக இங்கு கால் ஊன்றவே முடியாது. கூட்டணியை பொறுத்தவரை பாஜக கூட்டணியில் அதிமுக தற்போது இல்லை. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்ய முடியும். இது எனது கட்சியின் கருத்துதான் - அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்

Mon, 18 Sep 202308:38 AM IST

பாஜக உடன் கூட்டணியில் இல்லை -டி.ஜெயக்குமார்

பாஜக உடன் தற்போது கூட்டணியில் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவிப்பு

Mon, 18 Sep 202307:51 AM IST

8 முறை கருக்கலைப்பு செய்தேனா?-சீமான்

விஜயலட்சுமிக்கு 8 முறை கருக்கலைப்பு செய்தேன் என்பது மிகப்பெரிய நகைச்சுவை - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

Mon, 18 Sep 202307:50 AM IST

வீரலட்சுமி மன்னிப்பு கேட்க வேண்டும் - சீமான்

என் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சி செய்த வீரலட்சுமி மன்னிப்பு கேட்க வேண்டும் - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

Mon, 18 Sep 202307:21 AM IST

அழைப்பிதழை கிழித்து எறிந்த திருச்சி சிவா எம்.பி.,

மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நிலையில், இந்தியில் அச்சிட்ட அழைப்பிதழைக் கிழித்து எறிந்தார் திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா.

Mon, 18 Sep 202306:35 AM IST

இந்தியா குறித்த எதிர்மறை எண்ணம் மாறியுள்ளது - பிரதமர் மோடி

ஜி20 அனைவராலும் கொண்டாடப்பட வேண்டிய விஷயம். ஜி20 மாநாட்டால் இந்தியா குறித்த எதிர்மறை எண்ணம் மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைமைத்துவம் குறித்து எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஜி20 உச்சிமாநாடு விடையளித்துள்ளது. உலக நாடுகள் நம் பாரத நாட்டை நண்பனாக பார்க்கின்றன. ஜி20 மாநாட்டின் வெற்றி தனிநபருக்கானது அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்குமானது - பிரதமர் மோடி

Mon, 18 Sep 202306:17 AM IST

நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் தொடங்கியது

நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் தொடங்கியது. இன்று முதல் 5 நாட்கள் நடைபெற உள்ள இக்கூட்டத்தின் இன்றைய அமர்வு மட்டும் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறுகிறது.

Mon, 18 Sep 202306:16 AM IST

பழைய நாடாளுமன்றத்திற்கு விடை கொடுக்கிறோம் - பிரதமர் மோடி

பழைய வருத்தங்கள், புகார்களை புறந்தள்ளி உற்சாகத்துடன் புதிய நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும். விநாயகர் சதுர்த்தி தினத்தன்று புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு இடம் பெயர்கிறோம். வரலாற்று சிறப்பு மிக்க இந்த நாடாளுமன்றத்திற்கு நாம் அனைவரும் விடை கொடுக்கும் நேரம் இது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட உள்ளன - பிரதமர் மோடி.

Mon, 18 Sep 202305:36 AM IST

நடிகர் பாபி சிம்ஹா மீது வழக்கு

நிலத்தை அபகரித்து கட்டிடம் கட்டுவதாக கொடைக்கானல் காவல் நிலையத்தில் பிரபல நடிகர் பாபி சிம்ஹா மற்றும் கேஜிஎப் படத்தில் வில்லனாக நடித்த ராமசந்திரா ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .

Mon, 18 Sep 202305:32 AM IST

பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பு

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக் கூடியாத அமையும். 2047-ல் வளர்ந்த நாடாக இந்தியாவை உருவாக்குவதே இலக்கு. இந்தியாவின் முன்னேற்றத்தை உலகமே பாராட்டுகிறது என்று சிறப்பு கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி தெரிவித்தார்.

Mon, 18 Sep 202304:44 AM IST

விநாயகர் சதுர்த்தி - ஆளுநர் வாழ்த்து

விநாயகர் பெருமான் அனைவருக்கும் ஞானம், வலிமை, வெற்றி, மகிழ்ச்சி, வளம் ஆகியவற்றை வழங்கட்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Mon, 18 Sep 202304:43 AM IST

விநாயகர் சதுர்த்தி - பலத்த பாதுகாப்பு

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி இன்று தமிழ்நாடு முழுவதும் 74,000 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விநாயகர் சிலை ஊர்வல நிகழ்ச்சி முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளதாகவும், முக்கியமான ஊர்வலங்களில் கண்காணிப்பு பணிக்காக டிரோன்கள் மற்றும் மொபைல் சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் டி.ஜி.பி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

Mon, 18 Sep 202304:09 AM IST

பஞ்சாமிர்தம் விலை திடீர் உயர்வு

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தம் விலை முன்னெறிவிப்பின்றி திடீரென ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Mon, 18 Sep 202303:39 AM IST

தங்கம் பறிமுதல்

மதுரை, திருச்சி விமான நிலையங்களில் ரூ.2.34 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Mon, 18 Sep 202303:26 AM IST

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,556 கன அடியாக அதிகரித்துள்ளது.

Mon, 18 Sep 202302:33 AM IST

டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிவேகமாக பைக்கை இயக்கிய வாசன் நேற்று விபத்தில் சிக்கிய நிலையில், போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Mon, 18 Sep 202301:50 AM IST

இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Mon, 18 Sep 202301:49 AM IST

விருத்தாச்சலம் அருகே விபத்து

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயில் அருகே, சேலத்தில் இருந்து நெய்வேலி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளனர்.

Mon, 18 Sep 202301:49 AM IST

பக்தர்கள் வழிபாடு

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வழிபட்டனர்.

Mon, 18 Sep 202301:49 AM IST

விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு விநாயகர் கோயில்களில் அதிகாலையிலேயே சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து வழிபாடு செய்தனர்.