Tamil Live News Updates: சந்திரபாபு நாயுடு மகனுக்கு ரஜினி ஆறுதல்
Tamil Live News Updates: இன்றைய (13.09.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
Wed, 13 Sep 202312:52 PM IST
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் நடந்த சோதனை நிறைவு
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தி.நகர் சத்யா மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு
Wed, 13 Sep 202312:38 PM IST
சிலியில் நில நடுக்கம்
சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு
Wed, 13 Sep 202312:14 PM IST
வேளச்சேரியில் தீ விபத்து
சென்னை வேளச்சேரி பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் தீவிபத்து
Wed, 13 Sep 202311:21 AM IST
11 அமைச்சர்கள் மீது வழக்கு - அண்ணாமலை
தமிழ்நாடு அமைச்சரவையில் உள்ள 11 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
Wed, 13 Sep 202311:10 AM IST
எதிர்க்கட்சிகளில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தொடக்கம்
எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் டெல்லியில் உள்ள சரத்பவார் இல்லத்தில் தொடங்கி உள்ளது
Wed, 13 Sep 202310:48 AM IST
டெங்குவுக்கு கல்லூரி மாணவி உயிரிழப்பு
புதுச்சேரியை அடுத்த குருபாம்பேட் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி (19) டெங்கு காய்ச்சல் பாதித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்
Wed, 13 Sep 202310:46 AM IST
பாதுகாப்பு கேட்டு நடிகை விஜயலட்சுமி மனு
தற்கொலை செய்யப்போவதாக நடிகை விஜய லட்சுமி வீடியோ வெளியிட்ட நிலையில், அவருக்கு பாதுகாப்பு கோரி காவல்நிலையத்தில் தமிழர் முன்னேற்றப்படை கட்சி தலைவர் வீரலட்சுமி கோயம்பேடு துணை ஆணையரிடம் மனு அளித்துள்ளார்
Wed, 13 Sep 202310:24 AM IST
சந்திரபாபு நாயுடு மகனுக்கு ரஜினி ஆறுதல்
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைதாகி சிறையில் உள்ள நிலையில் அவரது மகன் நானா ரோகேஷை தொடர்பு கொண்டு நடிகர் ரஜிகாந்த் ஆறுதல் கூறி உள்ளார்
Wed, 13 Sep 202309:55 AM IST
நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் - அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு
வரும் செப்டம்பர் 18ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் 17ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
Wed, 13 Sep 202309:33 AM IST
சாத்தான்குளம் கொலை - ஜாமீன் தீர்ப்பு ஒத்திவைப்பு
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமீன் கேட்ட வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Wed, 13 Sep 202308:49 AM IST
’தமிழ்நாட்டில் மத மோதலை ஏற்படுத்த பாஜக திட்டம்’ கபில் சிபில்
ஆளுநர் ஆர்.என்.ரவி மூலம் தமிழ்நாட்டில் மத மோதலை ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக கபில் சிபில் எம்.பி பேட்டி
Wed, 13 Sep 202308:18 AM IST
ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சி - ஈபிஎஸ் குற்றச்சாட்டு
மதுரை அதிமுக மாநாடு போல், ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சிக்கும் முறையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காவல்துறையின் தோல்வியே காரணம் என்றும் ஈபிஎஸ் குற்றச்சாட்டு
Wed, 13 Sep 202308:17 AM IST
யானைக்கு மணிமண்டபம்
திருவண்ணாமலை: மறைந்த அண்ணாமலையார் கோயில் யானை ருக்குவுக்கு இந்து சமய அறநிலையத்துனை சார்பில் 49 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டும் பணிகள் தொடங்கியது
Wed, 13 Sep 202308:04 AM IST
அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை
அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Wed, 13 Sep 202306:48 AM IST
நீதிமன்ற காவலுக்கு எதிரான சந்திரபாபு நாயுடு மனு ஒத்திவைப்பு
நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
Wed, 13 Sep 202306:03 AM IST
வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - 50 பேர் உயிரிழப்பு
வியட்நாம் தலைநகர் ஹனோயில் 9 அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பேர் உயிரிழப்பு.
தீ விபத்துக்கான காரணம் குறித்து தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.
Wed, 13 Sep 202305:33 AM IST
பயங்கரவாத தாக்குதலில் ராணுவ மோப்ப நாய் உயிரிழப்பு
பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், மோப்ப நாய் உயிரிழப்பு. இந்த தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். மேலும், 3 பேர் காயமடைந்தனர்.
Wed, 13 Sep 202305:14 AM IST
நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த ஜார்கண்டை சேர்ந்த 16 வயது மாணவி தற்கொலை.
நடப்பாண்டில் மட்டும் அங்கு தற்கொலை செய்த மாணவர்களின் எண்ணிக்கை 25ஐ நெருங்கியுள்ளது
Wed, 13 Sep 202304:35 AM IST
தங்கம் விலை குறைவு
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து 5,480 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.43,840 ஆகவும் விற்பனையாகிறது.
Wed, 13 Sep 202304:17 AM IST
ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி - பணம் திரும்பி அளிக்கப்படுவதாக அறிவிப்பு
ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கி காண முடியாத அனைவருக்கும் பணம் திரும்பி அளிக்கப்படுவதாக, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Wed, 13 Sep 202304:13 AM IST
பிரபாஸின் சலார் பட ரிலீஸ் தள்ளி வைப்பு
கேஜிஎஃப் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. படம் 28ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Wed, 13 Sep 202303:51 AM IST
குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்ற கீர்த்தி பாண்டியன் - அசோக் செல்வன் திருமணம்
நடிகர் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனுக்கும், நடிகர் அசோக் செல்வனுக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் தென்காசி அருகே திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
Wed, 13 Sep 202303:30 AM IST
பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காவிரி ஆறு தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீரி வரத்து அதிகரித்துள்ளது. 2,500 கனஅடியாக இருந்த நீரின் அளவு தற்போது 4,500 கனஅடியாக உயர்ந்துள்ளது.
Wed, 13 Sep 202303:20 AM IST
40 சதவீதம் எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளது
இந்திய நாடாளுமன்ற எம்பிக்களில் 40 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இதில் 25 சதவீதம் பேர் மீது கொலை முயற்சி. ஆள்கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வழக்குகள் உள்ளது.
பிகார் மாநிலத்தை சேர்ந்த 41 எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wed, 13 Sep 202302:45 AM IST
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் சென்னை தியாகராயா நகர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை முதல் அவருக்கு சொந்தமான 18 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது
Wed, 13 Sep 202301:09 AM IST
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு
வரும் அக்டோபர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Wed, 13 Sep 202301:08 AM IST
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை உயர்வு
கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கு 4 என உயரந்துள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Wed, 13 Sep 202301:06 AM IST
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா
இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று போட்டியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆசிய கோப்பை தொடர் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.
Wed, 13 Sep 202301:03 AM IST
ஐபோன் 15 போன்களை வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம்
ஐபோன் 15 சீரிஸ் மாடல்களான ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 புரோ, ஐபோன் 15 புரோ மேக்ஸ் ஆகிய நான்கு மாடல் போன்கள் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இவற்றுடன் இரண்டு ஆப்பிள் வாட்ச்களையும் வெளியிட்டுள்ளது.