BrahMos Supersonic Missile : அந்தமானில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட பிரம்மோஸ்!
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து இந்திய ராணுவத்தின் மேற்குத் படை பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையை இன்று வெற்றிகரமாகச் சோதனை செய்தது.

வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட பிரம்மோஸ்
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து இந்திய ராணுவத்தின் மேற்குத் படை பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையை இன்று வெற்றிகரமாகச் சோதனை செய்தது. இத்தகவலை அந்தமான் நிக்கோபார் கமாண்ட் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதன் மூலம் இந்திய ராணுவம் மேலும் ஒரு சாதனை நிகழ்த்தியுள்ளது.
சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள் மிக வேகமாக தாக்கும். பிரம்மோஸ் ஏவுகணை ரஷ்யா மற்றும் இந்தியாவின் கூட்டு திட்டமாக தயாரிக்கப்பட்டது. இது எதிரிகளின் ரேடாரில் இருந்து தப்பிக்கும் திறன் கொண்டது.