தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Bollywood Actress Riya Sen Joins Rahul Gandhi's Bharat Jodo Yatra

Riya sen: ராகுலின் ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்ற நடிகை ரியா சென் - வீடியோ

Karthikeyan S HT Tamil
Nov 17, 2022 06:22 PM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் ஒற்றுமை நடைப்பயணத்தில் நடிகை ரியா சென் கலந்துகொண்டார்.

ராகுலின் நடைப்பயணத்தில் நடிகை ரியா சென்.
ராகுலின் நடைப்பயணத்தில் நடிகை ரியா சென்.

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழகம் கேரளா, கர்நாடாகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது இந்த யாத்திரை மகராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வாஷிம் மாவட்டம் அகோலா பகுதியில் இன்று (நவ.17) நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ள ராகுலுடன் பிரபல பாலிவுட் நடிகை ரியா சென் கலந்துகொண்டார். ரியா சென் தமிழில் இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகிய தாஜ்மஹால் மற்றும் பிரசாந்த் நடித்த குட்லக் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

 

பின்னர் ஹிந்தியில் பல படங்களில் நடித்தார். முன்னதாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஒற்றுமை நடைப்பயணத்தில் பாலிவுட் நடிகை பூஜா பட்டும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்