பிரதமர் ஏன் உலகத் தலைவர்களில் மிகவும் விரும்பப்படுகிறார்?-வீடியோ பகிர்ந்த நட்டா
PM Modi: ‘அவர் மிகவும் நேசிக்கப்படுவதற்கு ஒரு காரணம் அல்ல. நூறு காரணங்கள் இருக்கின்றன.’
பாஜக தேசியத் தலைவர் நட்டா, பிரதமர் மோடி ஏன் உலகத் தலைவராக மிகவும் விரும்பப்படுகிறார் என்பதற்கான காரணங்களுடன் வீடியோவை ட்வீட் செய்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
பிரதமர் மோடி உலகின் மிகவும் விரும்பப்படும் அரசியல் தலைவர் என சமீபத்தில் ஒரு சர்வேயில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
78 சதவீதத்துக்கும் அதிகமான ஆதரவைப் பெற்ற இரண்டாவது முறையாக பிரதமர் மோடி மிகவும் நேசிக்கப்படும் உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்திருந்தார்.
அமெரிக்க அதிபர் பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் இருக்கிறார் பிரதமர் மோடி.
இந்நிலையில், பிரதமர் மோடி ஏன் மிகவும் நேசிக்கப்படும் உலகத் தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார் என்பதற்கான வீடியோ ஒன்றை சமூக வலைத்தளமான டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி.
அத்துடன் அவர் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், "காரணம் இல்லாமல் பிரதமர் மோடி மிகவும் விரும்பப்படும் உலகத் தலைவர்களில் ஒருவராக ஆகவில்லை. அவர் மிகவும் நேசிக்கப்படுவதற்கு ஒரு காரணம் அல்ல. நூறு காரணங்கள் இருக்கின்றன. இந்த புதுமையான வீடியோ அதற்கான காரணங்களை அனிமேட்டட் வீடியோவில் அடுக்கியிருக்கின்றன" என்று பதிவிட்டிருந்தார்.
சுமார் ஒன்றரை நிமிடங்கள் வரை ஓடும் அந்த அனிமேட்டட் வீடியோவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டுவந்த பல்வேறு நலத் திட்டங்களை நம்பர் 1 என பிரதமர் மோடியே அடுக்குவது போன்ற காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வீடியோவின் கடைசி கட்டத்தில் பிரதமர் மோடி நம்பர் 1 இடத்திலும், மெக்ஸிகோ அதிபர் லோபஸ் ஆப்ரடோர் இரண்டாவது இடத்திலும் இருப்பதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், மூன்றாவது இடத்தில் சுவிட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பெனிஸ் 4வது இடத்திலும் இருப்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மக்களிடையே அவர்கள் இருக்கும் பிரபலமும் சதவீதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை சமூக வலைத்தள வாசிகள் பலரும் லைக் செய்தும் பகிர்ந்தும் வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.