தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Bjp Alleges Rahul Gandhi Gave Biscuit From Dog Plate To Congress Leader Read More Details

Rahul Gandhi: சர்ச்சையில் சிக்கிய ராகுல்: 'நாய் பிஸ்கட்டை கட்சித் தொண்டருக்கு கொடுத்தார்'-பாஜக குற்றச்சாட்டு

Manigandan K T HT Tamil
Feb 06, 2024 11:02 AM IST

Congress: இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிஸ்கட்டை கட்சித் தொண்டருக்கு கொடுத்த ராகுல் காந்தி
பிஸ்கட்டை கட்சித் தொண்டருக்கு கொடுத்த ராகுல் காந்தி (@amitmalviya)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவை எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) இல் பகிர்ந்த மாளவியா, “சில நாட்களுக்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் கார்கே ஜி கட்சியின் பூத் ஏஜெண்டுகளை செல்லப்பிராணியுடன் ஒப்பிட்டார். இங்கு ராகுல் காந்தி தனது வருகையின் போது நாய்க்கு பிஸ்கட் ஊட்டுகிறார், அந்த நாய் சாப்பிடாத நிலையில், அதே பிஸ்கட்டை தனது கட்சி பிரமுகருக்கு கொடுத்துள்ளார். ஒரு கட்சியின் மூத்த தலைவர், கட்சித் தொண்டர்களை நாய்களைப் போல் நடத்தினால், அத்தகைய கட்சி காணாமல் போவது இயற்கையானது' என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பாஜக மூத்த தலைவரான பல்லவி சி.டி, 'முன்னாள் காங்கிரஸ் தலைவரும், தற்போது அஸ்ஸாம் முதல்வருமான ஹிமந்தா பிஸ்வா சர்மாவை "ராகுல் காந்தியின் செல்ல நாயான பிடி" தட்டில் இருந்து பிஸ்கட் "சாப்பிட" செய்ததை நினைவுகூருகிறேன். இப்போது அவர் ஒரு நாயால் நிராகரிக்கப்பட்ட பிஸ்கட்டை ஒரு கட்சி பிரமுகரிடம் கொடுக்கிறார். இதுதான் அவர்கள் தங்கள் கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் வாக்காளர்கள் மீது வைத்திருக்கும் மரியாதையா?' என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது பதிவிற்கு பதிலளித்த ஹிமந்தா பிஸ்வா சர்மா, “பல்லவி ஜி, ராகுல் காந்தி மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடும்பமும் என்னை அந்த பிஸ்கட்டை சாப்பிட வைக்க முடியவில்லை. நான் ஒரு தன்மானம் மிக்கவன். இந்தியனாச்சே. நான் அந்த பிஸ்கட்டை சாப்பிட மறுத்து காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்தேன்" என்று குறிப்பிட்டார்.

மற்றொரு பாஜக தலைவர் ஹரிஷ் குரானா கூறுகையில், “பெரும் பழமையான கட்சியில் அற்புதமான கலாச்சாரம் உள்ளது போல. இதுதான் உண்மையான காங்கிரஸ்'' என்றார்.

ராகுல் பதில்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் "பத்திரிக்கையாளர்களை சந்தித்த ராகுல் காந்தி" இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது யாத்திரையில் நான் நிறைய மக்களை பார்க்கிறேன் அப்படி ஒரு நபர் தனது நாயுடன் வந்திருந்தார். நாய்க்குட்டிக்கு நான் பிஸ்கட் கொடுத்த போது பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்த அது சாப்பிடவில்லை. அதனால் நாயின் உரிமையாளரிடம் கொடுத்து கொடுக்கச் சொன்னேன். இதெல்லாம் இவ்வளவு விவாதம் செய்ய வேண்டிய விஷயமா' என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல் காந்தி இன்னும் பல கேள்விகளையும் எதிர்கொண்டு பதில் சொன்னார்.

WhatsApp channel

டாபிக்ஸ்