தமிழ் செய்திகள்  /  Elections  /  Bjp 1st List For Lok Sabha Poll 2024: Modi From Varanasi, Amit Shah From Gandhinagar

Bjp Candidate List 2024: பாஜக வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்..பிரதமர் மோடி எங்கு போட்டியிடுகிறார் தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Mar 02, 2024 07:07 PM IST

Bjp candidate first list 2024: பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை.

வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் பிரதமர் மோடி.
வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் பிரதமர் மோடி.

ட்ரெண்டிங் செய்திகள்

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரப்படுத்தி வருகின்றன. தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. ஆட்சியை தக்கவைக்க ஆளும் கட்சியான பாஜக தேர்தல் முன்னேற்பாடு பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் பல்வேறு மாநில பாஜக தலைவர்களுடன் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களை இறுதி செய்வது தொடர்பாக கடந்த சில நாட்களாக ஆலோசனை மேற்கொண்டு வந்தனர்.

இந்த சூழலில், 543 லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 பேர் கொண்ட பட்டியலை பாஜக இன்று மாலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே வெளியிட்டுள்ளார். அதில், வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா களமிறங்குகிறார். மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா போர்ந்தர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

சுஸ்மா சுவராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ் டெல்லியில் போட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்தியப்பிரதேச மாநிலத்தின் குணா தொகுதியில் போட்டிடுகிறார். கேரள மாநிலம் திருச்சூரில் பாஜக வேட்பாளராக மீண்டும் களமிறங்குகிறார் நடிகர் சுரேஷ் கோபி. மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் அசாமின் திப்ருகர் தொகுதியிலும், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அருணாச்சலப் பிரதேசம் (மேற்கு) தொகுதியிலும் போட்டிடுகின்றனர்.

தற்போது மத்திய அமைச்சர்களாக இருக்கும் 34 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் இன்று வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் 34 மத்திய அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். பெண் வேட்பாளர்கள் 28 பேரும், இளம் வேட்பாளர்கள் 47 பேரும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படவில்லை.

பாஜக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலின் முழு விபரம்:

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்