தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Billionaires Rankings And Other Trending News For National And World On September 27

billionaires rankings: 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார் அதானி - முக்கிய செய்திகள்

Karthikeyan S HT Tamil
Sep 27, 2022 06:27 PM IST

உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட அதானி, நேரலையில் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை உள்பட பல முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

கெளதம் அதானி
கெளதம் அதானி

ட்ரெண்டிங் செய்திகள்

ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.

ஹிந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் வழக்கு விசாரணை நடவடிக்கைகள் குறித்த நேரடி ஒளிபரப்பு இன்று முதல் தொடங்கியது.

கேரளத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் சேதப்படுத்தப்பட்ட பொருள்களுக்கு ரூ. 5.06 கோடி இழப்பீடு கேட்கப்பட்டுள்ளது.

கேரளாவில் வர்க்கலா பகுதியில் கிணற்றுக்குள் தவறி விழுந்து, கயிற்றைப் பிடித்துக் கொண்டு 36 மணி நேரமாக உயிருக்கு போராடிய நபரை போலீசார் உயிருடன் மீட்டனர்.

தில்லியில் அனைத்து மாநில பாஜக பொறுப்பாளர்களுடன் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்றபோதிலும், போரைக் கண்டு அஞ்சும் நாடு அல்ல என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

திருமண நிகழ்வில் ஆதார் அட்டை கொண்டு வந்தவர்களுக்கு மட்டும் உணவு அளிக்கப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹா பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் காங்கிரஸில் குழப்பம் நீடித்து வரும் சுழலில், அம்மாநில முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவருமான சச்சின் பைலட்டுக்கு பாஜகவின் கதவுகள் திறந்திருப்பதாக அம்மாநில பாஜக தலைவர் சத்தீஷ் பூனியா தெரிவித்துள்ளார்.

துர்கா பூஜையை முன்னிட்டு, இந்தியாவின் கலாச்சார தலைநகரமான கொல்கத்தாவின் ஸ்ரீபூமி பந்தல் வாடிகன் நகரின் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா தீமில் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் முதல் பெண் பிரதமராக, ‘இத்தாலியின் சகோதரா்கள்’ கட்சியின் தலைவா் ஜியாா்ஜியா மெலோனி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

உலக பணக்காரர்களின் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் ஃபேசோஸ் கௌதம் அதானியை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

கர்நாடகாவில் அம்மாநில போலீசாரால் நடத்தப்பட்ட சோதனையில் பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்த 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் செப்டம்பர் 29ல் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தலித் மாணவன் ஒருவனை ஆசிரியர் அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்ஸாமின் 8 மாவட்டங்களில் பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் 25 பேரை அசாம் போலீசார் கைது செய்தனர்.

இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 3,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவின் கோழிக்கோட்டில் இருந்து 135 பயணிகளுடன் தில்லிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பறவை மோதி எஞ்சின் பழுதடைந்ததால் விமானம் அவசரமாக கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட உலக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்