கோல் இந்தியாவின் துணை நிறுவனமான பிசிசிஎல் IPO-க்கான ஆவணங்களை செபியிடம் சமர்ப்பித்தது!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  கோல் இந்தியாவின் துணை நிறுவனமான பிசிசிஎல் Ipo-க்கான ஆவணங்களை செபியிடம் சமர்ப்பித்தது!

கோல் இந்தியாவின் துணை நிறுவனமான பிசிசிஎல் IPO-க்கான ஆவணங்களை செபியிடம் சமர்ப்பித்தது!

Manigandan K T HT Tamil
Published Jun 02, 2025 11:59 AM IST

இந்திய அரசுக்குச் சொந்தமான பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் (BCCL) நிறுவனம், தனது IPOக்கான வரைவு ஆவணங்களை SEBI-யிடம் தாக்கல் செய்துள்ளது. இந்தியாவின் எஃகுத் தொழிலுக்கு இன்றியமையாத கோக்கிங் நிலக்கரியை BCCL வழங்கி வருகிறது.

கோல் இந்தியாவின் துணை நிறுவனமான பிசிசிஎல் IPO-க்கான ஆவணங்களை செபியிடம் சமர்ப்பித்தது!
கோல் இந்தியாவின் துணை நிறுவனமான பிசிசிஎல் IPO-க்கான ஆவணங்களை செபியிடம் சமர்ப்பித்தது!

உயர் தர கோக்கிங் நிலக்கரியை வெட்டி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு நிறுவப்பட்ட BCCL, நாட்டின் எஃகுத் தொழிலுக்கு மிகவும் முக்கியமானது. எஃகு உற்பத்திக்கும் தயாரிப்புக்கும் BCCL வழங்கும் நிலக்கரி மிகவும் அவசியமாகும்.

சமீபத்தில், கோல் இந்தியாவின் துணை நிறுவனமான கோல் சென்ட்ரல் மைன் பிளானிங் & டிசைன் இன்ஸ்டிடியூட் லிமிடெட் (CMPDIL) தனது IPOக்கான வரைவு ஆவணங்களை SEBI-யிடம் தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் நிலக்கரி உற்பத்தியில் 80% க்கும் அதிகமான பங்களிப்பை கோல் இந்தியா வழங்குகிறது. 2025 ஆம் ஆண்டின் மார்ச் காலாண்டில், கோல் இந்தியா அதன் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 12% அதிகரிப்பைக் காண்பித்துள்ளது. இதன் மூலம் ரூ. 9,604.02 கோடி நிகர லாபத்தை அடைந்துள்ளது. கடந்த ஆண்டின் அதே காலகட்டத்தில், ரூ. 8,572.14 கோடி நிகர லாபம் ஈட்டியது.

IPO விவரங்கள்

இந்த IPO-வில் புதிய பங்குகள் வெளியிடப்படாது. விற்பனைக்கான 46.5 கோடி பங்குகளை மட்டுமே கோல் இந்தியா லிமிடெட் வழங்கும்.

பாரத் கோக்கிங் கோல் லிமிடெட்டின் டிராஃப்ட் ரெட் ஹெர்ரிங் பிரஸ்மெக்டஸ் (DRHP) SEBI, BSE மற்றும் NSE-க்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று CIL ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. DRHP என்பது ஒரு நிறுவனம் பொதுப் பங்கு விற்பனைக்காக SEBI-க்கு சமர்ப்பிக்கும் ஆரம்ப ஆவணமாகும்.

இந்த DRHP தாக்கல், BCCL-ன் எதிர்பார்க்கப்படும் ஆரம்ப பொதுப் பங்கு விற்பனை (IPO) தொடர்பானது. இதில் கோல் இந்தியா லிமிடெட் 465,700,000 பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. இதற்குத் தேவையான அனுமதிகள், சந்தை நிலைமை மற்றும் பிற தொடர்புடைய காரணிகளைப் பொறுத்து இது இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெளிவுரை: மேலே உள்ள கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட பகுப்பாய்வாளர்கள் அல்லது தரகு நிறுவனங்களின் கருத்துகளாகும், தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்தின் கருத்துகள் அல்ல. எந்தவொரு முதலீட்டு முடிவுகளையும் எடுப்பதற்கு முன்பு, சான்றளிக்கப்பட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்கவும்.