AC Water Harvesting: பெங்களூருவில் நீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஏசி நீர் சேகரிப்பை வலியுறுத்திய ஆனந்த் மஹிந்திரா
AC Water Harvesting:பெங்களூருவில் நீர் பஞ்சம் தலைவிரித்தாடி வரும் நிலையில் முன்னணி தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, "இந்தியா முழுவதும் மக்கள் எங்கெல்லாம் ஏ/சி பயன்படுத்துகிறார்களோ அங்கெல்லாம் கிடைக்கும் நீரை பத்திரமாக சேமித்து வைக்க வேண்டும்'’ என்றார்.
AC Water Harvesting: கர்நாடக மாநிலம், பெங்களூருவின் தற்போதைய தண்ணீர் நெருக்கடிக்கு மத்தியில், மஹிந்திரா குழுமத்தின் துணைத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஏர் கண்டிஷனர்களில் இருந்து தண்ணீரை சேமிப்பது என்பது குறித்த ஒரு புதுமையான தீர்வைக் காட்டும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்த அந்த வீடியோ, ஏசி யூனிட்களில் இருந்து தினமும் தண்ணீரை சேகரிக்கும் எளிய பயனுள்ள முறையை எடுத்துக்காட்டுகிறது.
இந்தியா முழுவதும் இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மஹிந்திரா இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ஆனந்த் மஹிந்திரா, தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியா முழுவதும் மக்கள் எங்கெல்லாம் ஏ/சி பயன்படுத்துகிறார்களோ அங்கெல்லாம் வடியும் நீரை இவ்வாறு பத்திரமாக சேமித்து வைக்க வேண்டும்.
ஏசி யூனிட்டின் கன்டென்சேட் வடிகாலில் ஒரு குழாய் இணைக்கப்பட்டு, தண்ணீரை சேகரிப்புத் தொட்டியில் செலுத்தும் ஒரு அமைப்பை அந்த வீடியோ காட்டுகிறது. இந்த தனித்துவமான முறை ஏர் கண்டிஷனர்கள் கணிசமான அளவு நீரை சேகரிக்கப்பயன்படுகின்றன. இதனை பொதுவாக வடிகட்டிப்பயன்படுத்தலாம்.
"இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு" என்று அடிக்கடி குறிப்பிடப்படும் பெங்களூரு, சமீபத்திய ஆண்டுகளில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வருகிறது. பெங்களூரு நகரத்தின் வேகமாக வளர்ந்து வரும் மக்கள்தொகை மற்றும் நகரமயமாக்கல் அதன் வரையறுக்கப்பட்ட நீர் வளங்களில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் குடியிருப்பாளர்களை நிலையான தீர்வுகளை நோக்கி தூண்டுகிறது.
ஏசி நீர் சேகரிப்புக்கு ஆனந்த் மஹிந்திராவின் ஆலோசனை பலரையும் கவர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் கிடைக்கக்கூடிய ஒவ்வொரு நீர் ஆதாரத்தையும் பாதுகாத்து பயன்படுத்த வேண்டிய அவசர தேவையை மக்கள் உணர்ந்துள்ளனர். வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஏர் கண்டிஷனர்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுவதால், இந்த எளிய நுட்பம் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான லிட்டர் தண்ணீரை சேமிக்க உதவும்.
இதற்கிடையில், பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்பாளர்கள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டாலும், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நகரத்தில் தண்ணீர் நெருக்கடி இல்லை என்று மறுத்துள்ளார். குறிப்பாக ஒயிட்ஃபீல்ட், கே.ஆர்.புரம், எலக்ட்ரானிக் சிட்டி, ஆர்.ஆர்.நகர், கெங்கேரி மற்றும் சி.வி.ராமன் நகர் போன்ற பகுதிகளில் நடந்து வரும் குடிமக்களின் போராட்டங்களுக்கு முரணாக அவரது அறிக்கை வந்துள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூருவின் பல பகுதிகளில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை குறித்து கேட்டபோது, பெங்களூரு மேம்பாட்டு பொறுப்பாளரான சிவகுமார், "பெங்களூருவைப் பொறுத்தவரை, தண்ணீர் நெருக்கடி இல்லை. சுமார் 7,000 ஆழ்துளை கிணறுகள் மட்டுமே வறண்டுள்ளன. அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளோம். தண்ணீர் டேங்கர்களின் கட்டுப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளோம். நீர் ஆதாரங்களை அடையாளம் கண்டுள்ளோம். தண்ணீர் விநியோகம் முறையாக நடக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்வோம்" என்றார்.
எவ்வாறாயினும், பெங்களூரு குடியிருப்பாளர்கள் அன்றாடத் தேவைகளுக்கு சுத்தமான தண்ணீரை அணுகுவதில் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். பலர் தனியார் தண்ணீர் டேங்கர்களை அதிக கட்டணத்தில் நம்பியுள்ளனர். வளர்ந்து வரும் நகரமயமாக்கல் மற்றும் காலநிலை மாற்றத் தாக்கங்களை எதிர்கொள்ளும் நகரத்தின் தயார்நிலை மற்றும் நீர் மேலாண்மை உத்திகள் குறித்து இந்த நிலைமை கவலைகளை எழுப்பியுள்ளது.
டாபிக்ஸ்