தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Bel Apprentice Recruitment 2024 Apply For 115 Posts At Bel India In

BEL Apprentice Recruitment 2024: பெல் நிறுவனத்தில் 115 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு இப்போதே விண்ணப்பிக்கலாம்!

Manigandan K T HT Tamil
Jan 04, 2024 04:36 PM IST

பெல் நிறுவனம் அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கிறது. தகுதியானவர்கள் bel-india.in விண்ணப்பிக்கலாம்.

பெல் நிறுவனம் அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கிறது.
பெல் நிறுவனம் அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்கான பதிவு, ஜன., 1ல் துவங்கி, 2024 ஜன., 15ல் முடிவடைகிறது. தகுதி, தேர்வு செயல்முறை மற்றும் பிற விவரங்களுக்கு கீழே படிக்கவும்.

முக்கிய தேதிகள்

  • விண்ணப்பம் தொடங்கும் தேதி: ஜனவரி 1, 2024
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 15, 2024
  • ஆன்லைன் தேர்வு: பிப்ரவரி முதல் வாரம் 

விவரங்கள்

  • மெக்கானிக்கல் இன்ஜினியரிங்: 30 பணியிடங்கள்
  • கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் & இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்: 15 பணியிடங்கள்
  • எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங்: 30 பணியிடங்கள்
  • சிவில் இன்ஜினியரிங்: 20 பணியிடங்கள்
  • மாடர்ன் ஆபீஸ் மேனேஜ்மென்ட் & செக்ரட்டரி பிராக்டிஸ்: 20 பணியிடங்கள்

ஜென்/ இ.டபிள்யூ.எஸ்., தகுதி: 01.01.2024 தேதியின்படி அதிகபட்சம் 23 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். எஸ்சி/ எஸ்டி/ பிடபிள்யூடி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை

பி.இ.எல் காசியாபாத் நடத்தும் எழுத்துத் தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். எழுத்துத் தேர்வு 2024 பிப்ரவரி முதல் வாரத்தில் பெல் காசியாபாத்தில் நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மூலம் எழுத்துத் தேர்வுக்கு தெரிவிக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு பெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்