Tamil News  /  Nation And-world  /  Bank Servers Down? Netizens Claim Upi Transaction Failures

UPI Transaction Failure: நாடு முழுவதும் ஸ்தம்பித்த யுபிஐ பரிமாற்றங்கள்! பொதுமக்கள் குமுறல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 06, 2024 09:11 PM IST

நாடுமுழுவதும் பல்வேறு முக்கிய வங்கிகளின் யுபிஐ சேவை இன்று மாலையில் பாதிக்கப்பட்டிருப்பது பயனாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

யுபிஐ பரிமாற்றத்தில் சிக்கல்
யுபிஐ பரிமாற்றத்தில் சிக்கல்

ட்ரெண்டிங் செய்திகள்

பிரபல வங்கிகளான எச்டிஎஃப்சி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ரா, எஸ்பிஐ, கோடாக் மகேந்திரா உள்பட பல்வேறு வங்கிகளும் இந்த பிரச்னையை சந்திதுள்ளது. சர்வர் பிரச்னை காரணமாக யுபிஐ பரமாற்றத்தில் பயனாளர்கள் சிக்கலை சந்தித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

டவுன்டிடெக்டர் என்கிற தளம், இந்த சேவைகள் தொடர்பான விஷயங்களை கண்காணித்து வருகிறது. தற்போது நிலவி வரும் பணிபரிமாற்றம் தொடர்பான பிரச்னைகளின் பாதிப்பை சந்தித்திருக்கும் வங்கிகளின் மூலமாக அறிக்கையாக வந்துள்ளது.

இதற்கிடையே தற்போது நிலவி வரும் யுபிஐ பரிமாற்றம் தொடர்பான பிரச்னைகள் குறித்து வங்கிகள் தரப்பிலிருந்தோ அல்லது என்பிசிஐ என்று அழைக்கப்படும் தேசிய பணம் செலுத்தும் நிறுவனம் தரப்பிலிருந்தோ ஒப்புக்கொள்ளவில்லை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel