Bank of Baroda Recruitment 2024: பேங் ஆஃப் பரோடாவில் 627 மேலாளர் மற்றும் பிற பதவிகளுக்கான பணியிட அறிவிப்பு
Bank of Baroda Recruitment 2024: பேங்க் ஆஃப் பரோடா நிர்வாக மற்றும் பிற பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் 627 மேலாளர் மற்றும் பிற பதவிகளுக்கான பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Bank of Baroda Recruitment 2024: பேங்க் ஆஃப் பரோடா நிர்வாக மற்றும் பிற பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் பேங்க் ஆப் பரோடாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் ஆன bankofbaroda.in என்ற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த ஆட்சேர்ப்பு அறிவிக்கையின்மூலம், பேங்க் ஆஃப் பரோடா நிறுவனத்தில் 627 பணியிடங்களை நிரப்பப் போகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள், வரும் ஜூலை 2, 2024 ஆகும். தகுதி, தேர்வு செயல்முறை மற்றும் பிற விவரங்களுக்குக் கீழே படிக்கவும்.
காலியிட விவரங்கள்
- Dy. Vice President- தரவு விஞ்ஞானி & தரவு பொறியாளர்(Data Scientist & Data Engineer): 4 பணியிடங்கள்
- Asst. Vice President – Data Scientist & Data Engineer: 9 பணியிடங்கள்
- Architects: 8 பணியிடங்கள்
- மண்டல விற்பனை மேலாளர்: 3 பணியிடங்கள்
- உதவி துணைத் தலைவர்: 20 பணியிடங்கள்
- Senior Manager: 22 பணியிடங்கள்
- Manager: 11 பணியிடங்கள்
- Radiance Private Sales Head (ரேடியன்ஸ் தனியார் விற்பனை தலைவர்): 1 பதவி
- குழு தலைவர்: 4 பதவிகள்
- பிரதேசம் தலைவர்(Territory Head): 8 பதவிகள்
- சீனியர் ரிலேஷன்ஷிப் மேனேஜர்: 234 பதவிகள்
- இ-செல்வத்தை நிர்வகிக்கும் உறவு மேலாளர்கள்(E-Wealth Relationship Managers): 26 பதவிகள்
- தனியார் வங்கியாளர்-ரேடியன்ஸ் தனியார்(Private Banker-Radiance Private): 12 பதவிகள்
- குழு விற்பனை தலைவர் (மெய்நிகர் RM விற்பனை தலைவர்): 1 பதவி
- செல்வ வள நிபுணர் (முதலீடு மற்றும் காப்பீடு) / தயாரிப்பு தலைவர்: 10 பதவிகள்
- போர்ட்ஃபோலியோ ஆராய்ச்சி ஆய்வாளர்: 1 பதவி
- AVP- கையகப்படுத்தல் & உறவு மேலாளர்: 19 பதவிகள்
- அந்நிய செலாவணி கையகப்படுத்தல் & உறவு மேலாளர்: 15 பதவிகள்
- Credit Analyst: 80 பதவிகள்
- Relationship Manager: 66 பதவிகள்
- Senior Manager- Business Finance: 4 பணியிடங்கள்
- Chief Manager- Internal Controls: 3 பணியிடங்கள்
தகுதி வரம்பு:
மேலே குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விரிவான அறிவிப்பின் மூலம் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பை சரிபார்த்துக்கொண்டு விண்ணப்பிக்கவும்.
தேர்வு செயல்முறை:
தேர்வுசெய்யப்படுபவர்கள், அடுத்தடுத்த சுற்றுகளில் தனிப்பட்ட நேர்காணல் அல்லது வேறு ஏதேனும் தேர்வு முறையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் மற்றும் இன்டிமேஷன் கட்டணங்கள் (திரும்பப் பெற முடியாதவை) ரூ. 600/-பொது/EWS மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு கட்டவேண்டும் (பொருந்தக்கூடிய GST & பரிவர்த்தனை கட்டணங்கள்) மற்றும் SC/ ST/PWD/பெண்கள் வேட்பாளர்களுக்கு (மேலும் பொருந்தக்கூடிய GST & பரிவர்த்தனை கட்டணங்கள்) ரூ.100/- (அறிவிப்பு கட்டணங்கள் மட்டும்) கட்ட வேண்டும். டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு / இன்டர்நெட் பேங்கிங் போன்றவற்றைப் பயன்படுத்தி திரையில் கேட்கப்படும் தகவலை வழங்குவதன் மூலம் பணம் செலுத்தலாம். மேலும் தொடர்புடைய விவரங்களுக்கு, பேங்க் ஆஃப் பரோடாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.
விரிவான அறிவிக்கை 1
விரிவான அறிவிக்கை 2

டாபிக்ஸ்