தூங்கு தம்பி, உறங்க விடுமுறை… பெங்களூரு நிறுவனம் ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்
World Sleep Day 2023 : உலக தூக்க தினத்தில் விடுமுறை கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்த பெங்களூர் நிறுவனம். இதனால், ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உலக தூக்க தினம், உறக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் உறக்கம் குறித்த முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும், சரியாக தூங்காததால் ஏற்படும் உடல் உபாதைகளை உணர்த்துவதற்கும், நமது நலவாழ்வுக்கு தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பதாலும் கடைபிடிக்கப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஊழியர்களுக்கு உறக்க தினமான மார்ச் 17ம் தேதி இன்று விடுமுறை அளித்துள்ளது. ஊழியர்களுக்கு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அந்நிறுவனம் இந்த சர்ப்ரைஸ் கிப்டை அதன் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.
வேக்பிட் சொலியூசன் என்ற நிறுவனம், லிங்க்ட்இன்னில் ஒரு ஸ்கிரீன் ஷாட்டை ஷேர் செய்துள்ளது. அது, அதன் ஊழியர்களுக்கு அனுப்பிய மெயிலின் காப்பி, சர்ப்ரைஸ் ஹாலிடே, உறக்கம் என்ற பரிசை அறிவிக்கிறோம் என்ற தலைப்பிட்டு, அதன் ஊழியர்களுக்கு இமெயில் அனுப்பப்பட்டுள்ளது.
வேக்பிட் நிறுவனம் சர்வதேச உறக்க தினத்தை மார்ச் 17ம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடும் வகையில், அதன் ஊழியர்களுக்கு அன்று விருப்ப விடுமுறை அளிக்கப்படுகிறது. தூக்கத்தை விரும்புபவர்களுக்கு, நாங்கள் தூக்கத்தை பண்டிகையைப்போல் கொண்டாடுகிறோம். அதிலும் வெள்ளிக்கிழமையென்றால் அது மிக விசேசமான ஒன்றுதான். இந்த விடுமுறையை மற்ற விடுமுறையைப்போல் நீங்கள் ஹெச்ஆர் போர்ட்டலில் பெறலாம்.
21 சதவீதம் பேர் வேலை நேரத்தில் தூக்கம் வருவதை உணர்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2022 முதல் 11 சதவீதம் மக்கள் சோர்வாகவே எழுந்திருக்கிறார்கள். தூக்கத்தால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை கருத்தில்கொண்டு தூங்குவதற்காக விடுமுறை கொடுக்காமல் தூக்க தினத்திற்கு வேறு என்ன பரிசு கொடுத்துவிட முடியும் எனவே அன்று விடுமுறை அளித்து தனது ஊழியர்களுக்கான இமெயிலில் அது தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் கடந்தாண்டு ரைட் டு நாப் கொள்கையை அறிவித்தது. அதன்படி ஊழியர்கள் பணியின் இடையே அரை மணி நேரம் தூங்கிக்கொள்ளலாம்.
மதியவேளையில் சிறிது நேரம் ஓய்வெடுப்பது, உடலை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவுவதோடு, வேலையில் கவனம் செலுத்தவும், வேலையில் சுணக்கமின்றி செயல்பட ஒரு உந்துதலை ஏற்படுத்தும். இந்நிறுவனம் இதை துவக்கியதன் மூலம் மற்ற நிறுவனங்களும் தூக்கத்திற்கு விடுமுறை கொடுப்பதை பின்பற்றும் என்றும், இதனால், இந்நிறுவனம் தூக்கப்புரட்சிக்கு வித்திட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.