தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Ban Rss Too, Trending News For National And World On September 28

Ban RSS: ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தடை செய்ய வேண்டும் - முக்கிய செய்திகள் (செப்.28)

Karthikeyan S HT Tamil
Sep 28, 2022 07:17 PM IST

ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தடை செய்ய வேண்டும் என லாலு பிரசாத் கூறியுள்ளது, நாட்டின் முதல் உள்நாட்டு துப்பாக்கியை உருவாக்கிய இளைஞர் உள்பட பல முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா உள்பட 8 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பையும் ஒன்றிய அரசு தடை செய்ய வேண்டும் என பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

தீவிர குற்ற செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற அரசியல்வாதிகளை பொதுவாழ்வில் ஈடுபட தடை விதிக்கக்கோரிய மனு மீது பதிலளிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காஷ்மீரில் இந்த ஆண்டு முழுவதும் நடைபெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் 34 பாகிஸ்தானியர் உள்பட மொத்தம் 142 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் முதல்வர் பதவியை அசோக் கெலாட் ராஜிநாமா செய்யமாட்டார் என மாநில மூத்த அமைச்சர் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் தெரிவித்தார்.

மேற்கு வங்காளத்தில் ஓர் குடும்பத் தகராறில் தன் மாமனாரின் ஆணுறுப்பை மருமகள் அறுக்க முயன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது.

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவிகிதமாக உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

காங்கிரஸ் கட்சித் தலைவராக விருப்பமில்லை என்று கூறிய காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநில தலைவருமான கமல்நாத், மத்தியப் பிரதேச தேர்தலில் மட்டும் கவனம் செலுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார்.

லதா மங்கேஷ்கரின் பிறந்தநாள் தினமான இன்று அவரது நினைவை போற்றும் வகையில் 40 அடி நீளமுள்ள வீணையை, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியாவில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

புதுச்சேரி மின் துறையை தனியார்மயமாக்க அரசு டெண்டர் கோரப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் துறை ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (பிஎம்ஜிகேஏய்) திட்டத்தை அடுத்த 3 மாதங்களுக்கு ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது.

திருப்பதி - திருமலை இடையே முதல் பேட்டரி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கலைக்கப்படுவதாக கேரள மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் அறிவித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் கொல்லப்பட்ட இளம்பெண் அங்கிதாவின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளனா்.

புதிய இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தெரிவித்துள்ளார்.

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஒன்றிய அரசு முடக்கியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹூப்ளியைச் சேர்ந்த இளைஞர் அங்குஷ் கொரவி என்பவர் நாட்டின் முதல் உள்நாட்டு துப்பாக்கியை உருவாக்கியுள்ளார்.

உத்தரப் பிரதேசம் அருகே போதைக்கு அடிமையான ஓர் நபரின் வயிற்றிலிருந்து 63 ஸ்பூன்கள் அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெளியில் எடுத்தனர்.

முனைவர் பட்டம் பயிலும் மாணவர்கள் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை ஆய்விதழ்களில் பிரசுரிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்ற புதிய நடைமுறையை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அறிமுகப்படுத்துகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்