Bajaj Pulsar P150: இளைஞர்களே பல்சர் வந்துடுச்சு!
பல்சர் பி150
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் சீரிஸில் புதிய பி150 (P150) என்ற பைக்கை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் இருக்கும் மோட்டார் நிறுவனங்களில் பஜாஜ் நிறுவனத்திற்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளன. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள பல்சர் பைக் விற்பனையில் மிகப்பெரிய சாதனை படைத்தது. அந்த வகையில் தற்போது பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் சீரிஸில் புதிய பி150 (P150) என்ற பைக்கை அறிமுகம் செய்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
இதனை பஜாஜ் நிறுவனம் N சீரிஸ் பைக்குகளை உருவாக்கிய அதே பிளாட்பார்மில் உருவாக்கி உள்ளது. பல புதிய வசதிகள் இந்த பைக்கில் பஜாஜ் நிறுவனம் இணைத்து வெளியிட்டுள்ளன.
இதன் அம்சங்கள்
- இந்த பைக்கில் சிங்கள் டிஸ்க், ட்வின் டிஸ்க் என்ற இரண்டு வேரியண்ட்களை வெளியிட்டுள்ளது இதில் சிங்கள் சீட் மற்றும் ஸ்ப்ளிட் சீட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது
- இது ஷார்ப், ஸ்போர்ட்டி, எடை குறைவான மற்றும் உயரமான பைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் Racing Red, Caribbean Blue, Ebony black blue, Ebony black red, Ebony black white என ஐந்து வண்ணங்களில் வெளியிடப்பட்டுள்ளன
- இதில் 149.68cc பெட்ரோல் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இது 14.5PS பவர் மற்றும் 13.5NM டார்க்விசை கொண்டதாகும்.
- இந்த பைக்கில் டெலெஸ்கோபிக் போர்க், மோனோஷாக் ரியர், LED டைல் லேம்ப், LED ப்ரொஜெக்டர் ஹெட் லேம்ப் உள்ளது. இதில் USB சாக்கெட், சிங்கள் சேனல் ABS, இன்பினிட்டி டிஸ்பிலே வசதி, கியர் இண்டிகேட்டர், பியூயல் எகானாமி, DTE (Distance to Empty) போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
- இதன் எக்ஸ்ஷோரூம் விலையானது 1.16 லட்சம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது.