Prajwal Revanna: பாலியல் வீடியோ விவகாரம்! தூக்க ரெடியான போலீஸ்! முன் ஜாமீன் கேட்டு பிரஜ்வல் ரேவண்ணா மனு!
ஜெர்மனியில் இருந்து திரும்ப உள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை பெங்களூரு விமான நிலையத்திலேயே கைது செய்ய கர்நாடக சிறப்பு புலனாய்வு குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். இந்த கைதை தவிர்பதற்காக முன் ஜாமீன் மனுவை பிரஜ்வல் ரேவண்ணா நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளார்.
Prajwal Revanna: பாலியல் வீடியோ விவகாரம்! தூக்க ரெடியான போலீஸ்! முன் ஜாமீன் கேட்டு பிரஜ்வல் ரேவண்ணா மனு! (REUTERS)
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹாசன் தொகுதி எம்.பியும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து உள்ளார்.
கர்நாடகாவை உலுக்கிய பாலியல் வீடியோ
தன் வீட்டில் வேலை செய்யும் பெண்கள் உட்பட பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஹாசன் தொகுதி எம்பியான பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார்கள் எழுந்ததுடன், அது தொடர்பான வீடியோக்களும் பரவியது.
பெண்களை பாலியல் ரீதியாக துன்புருத்திய புகார்கள் தொடர்பாக அவர் மீது மூன்று காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.