Ramdev cheapcomment:ஆடை அணியாவிட்டால் பெண்கள் அழகாய் தெரிகின்றனர்- பாபா ராம்தேவ்
ஆடை அணியாவிட்டால் பெண்கள் அழகாகத் தெரிவதாக யோகா குரு பாபா ராம்தேவ் கூறிய கருத்து சர்ச்சையக் கிளப்பியுள்ளது.
தாணே: மகாராஷ்டிர மாநிலம் தாணேயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் இவ்வாறு பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், புடவையிலும், சல்வார் உடைகளிலும் பெண்கள் அழகாகத் தோன்றுகின்றனர். என் பார்வையில் அவர்கள் ஒன்றும் அணியாமல் இருந்தாலும் அழகாக இருக்கிறார்கள் என்றார்.
அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் துணைத்தலைவர் நீலம் கோர்கே, ராம்தேவைக் கண்டித்துப் பேசுகையில் பெண்களை இத்தனை இழிவான கண்ணோட்டத்துடன் அவர் பார்த்தது மிகவும் தவறு. கண்டிக்கத்தக்கது. தங்களைத் தாங்களே குரு என்று நாட்டில் சொல்லிக் கொள்ளும் பலரும் இதுபோன்ற அநாகரிகமான கருத்துக்களைக் கூறுவது வெட்கக்கேடான விஷயமாகும் என்றார்.
ராம்தேவை கண்டித்து தில்லியில் பெண் தொழிலாளர்கள் அவரது படத்துக்கு செருப்பு மாலை அணிவித்தனர்.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநில பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரூபாலி சகாங்கர் இதுகுறித்து 3 நாட்களுக்கும் விளக்கம் அளிக்கவேண்டும் எனக் கூறி ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தில்லி பெண்கள் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவலும் ராம்தேவ் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்வாறு பேசியதற்கு ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
டாபிக்ஸ்