தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Ayodhya Ram Temple Old Woman Observes Silent Fast For 30 Years For Ram Temple In Ayodhya

Ayodhya Ram Temple: அயோத்தியில் ராமர் கோயிலுக்காக 30 ஆண்டுகள் மெளன விரதம் இருந்த மூதாட்டி!

Manigandan K T HT Tamil
Jan 10, 2024 12:32 PM IST

ராமர் கோயில் கும்பாபிஷேகம் அன்று 30 ஆண்டுகளுக்குப் பிறகு மௌன விரதத்தை கலைக்கவுள்ளார் அந்த மூதாட்டி.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதற்காக மெளன விரதம் இருந்து வரும் மூதாட்டி
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதற்காக மெளன விரதம் இருந்து வரும் மூதாட்டி

ட்ரெண்டிங் செய்திகள்

ராமர் கோயில் கும்பாபிஷேகம் அன்று 30 ஆண்டுகளுக்குப் பிறகு மௌன விரதத்தை கலைக்கவுள்ளார் அந்த மூதாட்டி.

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியைச் சேர்ந்த 85 வயதான சரஸ்வதி தேவி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக கடவுளின் ஆசீர்வாதம் வேண்டி 30 ஆண்டுகளாக மவுன விரதம் இருந்து வருகிறார். உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ராம பக்தர்களின் விருப்பங்களுடன் தனது விருப்பங்களை நிறைவேற்றியதைத் தொடர்ந்து ஜனவரி 22 ஆம் தேதி ராம் லல்லா கும்பாபிஷேகத்திற்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

4 குழந்தைகளுக்கு தாயான சரஸ்வதி தேவி, 1986 ஆம் ஆண்டு தனது கணவர் காலமான நிலையில் தனது வாழ்நாளை ராமருக்கு அர்ப்பணித்தார் என்கின்றனர் அவரது குடும்பத்தினர். நாடு முழுவதுமுள்ள பல்வேறு கோயில்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார் சரஸ்வதிதேவி.

இதுகுறித்து அவரது மகனான ராம் அகர்வால் கூறுகையில், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் வரை மௌனவிரதம் கடைபிடிக்கப்போவதாக 1992 ஆம் ஆண்டு எனது தாயார் சபதம் எடுத்தார். கும்பாபிஷேகம் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து மகிழ்ச்சியாக இருக்கிறார்.

வீட்டில் குடும்ப உறுப்பினர்களிடம் அவர் பேச சைகை மொழியையும் காகிதத்தில் எழுதிக் காண்பிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார். தினமும் 23 மணி நேரம் மௌன விரதம் இருப்பார் என்றும் மதியம் 1 மணி நேரம் மட்டும் மற்றவர்களுடன் பேசுவார்.

2020 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி ராமர் கோயிலுக்கு அயோத்தியில் அடிக்கல் நாட்டிய பிறகு 24 மணி நேர மௌன விரதத்திற்கு சென்றார்'' என்றார்.

WhatsApp channel

டாபிக்ஸ்