Ayodhya Ram Mandir: 56 வெரைட்டி, 560 கிலோ..! அயோத்தி ராமர் கோயிலுக்கு படையலாக செல்லும் ஆக்ரா பேடா
சுவை மிகுந்த பல்வேறு ப்ளேவர்களில் சுமார் 560 கிலோ எடையளவு பேடாக்களை ஆக்ராவின் இனிப்பு கடை உரிமையாளர்கள் தயார் செய்துள்ளனர். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்த தயாரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அயோத்தியில் கட்டப்பட்டிருக்கும் ராமர் கோயிலுக்கு ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்பதற்காக பொதுமக்கள் பல்வேறு தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து ஆக்ராவை சேர்ந்த இனிப்பு கடை உரிமையாளர்கள் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 56 வெரைட்டிகளில் பேடா ஸ்விட்களை செய்யவுள்ளனர். இந்த இனிப்பு வகைகள் ராமருக்கு படையலாக அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
பேடா என்ற இனிப்பு வகை ஸ்வீட் ஆக்ராவில் மிகவும் பிரபலமாக உள்ளது. அந்த வகையில் அயோத்தியில் இருக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 56 வகை பேடாக்களுடன், சுமார் 560 கிலோ வரை கலவை பேடாக்கள் படையலாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கற்கள் பதிந்த ஆடை, வெள்ளி தட்டுக்கள், பூஜை சாமான்கள் என பலவற்றை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தானமாக பெற்று வருகிறது.
அந்த வகையில் ஆக்ரா பேடா படையலாக வழங்கப்பட இருக்கிறது. ஏற்கனவே ஆக்ரா வர்த்தக வாரியம் சார்பில் கொண்டுவரப்பட்ட பாஞ்சி பேடா என்கிற பேடா வகை கரசேவக்புரத்தில் வைத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்