Barbie Woman : உண்மையான பார்பி டால் பார்க்க ஆசையா? இதோ பார்பியாக மாறிய பெண்.. இதுக்கு ரூ.82 லட்சம் செலவு ஆச்சாம்!
ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாண்ட் பகுதியை சேர்ந்த ஜாஸ்மின் பாரஸ்ட் என்ற பெண் பார்பியாக மாற ஆசைப்பட்டு ரூ.82 லட்சம் செலவு செய்துள்ளார்.
பலருக்கும் விருப்பமான பொம்மைகளில் பார்பி பொம்மையும் ஒன்று. அதுவும் 90sகிட்ஸ்களுக்கு அதனை வாங்கி விளையாடுவது தான் அப்போது மிகப்பெரிய ஆசையாக இருக்கும். விதவிதமான நிறத்திலும், ஆடை வடிவமைப்புடனும் இருக்கும் பார்பி பொம்மைகளை வாங்கி விளையாட குழந்தைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பார்பி பொம்மைகளுடன் விளையாடுவது 90ஸ் கிட்ஸ்களின் கனவு சிலருக்கு கனவாகவே போய் இருக்காலாம். அந்த அளவிற்கு பார்பி டால் என்பது அனைவருக்கும் அவ்வளவு பிடிக்கும்.
இந்நிலையில் இந்த பார்பியை வாங்கி விளையாட ஆசைப்படுபவர்கள் மத்தியில், பார்பி பொம்மையைப் போன்றே தன்னை மாற்றிக்கொள்ளப் பெண் ஒருவர் ஆசைப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா குயின்ஸ்லேண்ட் பகுதியைச் சேர்ந்த 25 வயது ஜாஸ்மைன் ஃபாரஸ்ட் என்பவர் உண்மையான பார்பியைப் போல மாற சுமார் 1,00,000 அமெரிக்க டாலர்கள் செலவு செய்து அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். இது இந்திய மதிப்பில் 82.81 லட்சம் ரூபாய் ஆகும்.
லாஸ் ஏஞ்சல்ஸில் விடுமுறைக்காகச் செல்லும்போது, தன்னுடைய 18-வது வயதிலேயே மார்பகத்தைப் பெரிதாக்குவதற்கான சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். அதன்பிறகு 24 வயதில் இரண்டாவது முறையாக இந்தச் சிகிச்சையை மீண்டும் மேற்கொண்டார்.
வயிறு, கைகள், உள்தொடைகள், மேல் மற்றும் கீழ் முதுகு, கன்னம் மற்றும் முதுகு ஆகியவற்றில் இருக்கும் கொழுப்புகளை அகற்றி தசைகளை இறுக்கும் வாசர் லைபோசக்ஷன் சிகிச்சையைச் செய்தார். தன்னுடைய கனவு பார்பியின் உருவத்தை அடைய பலமுறை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளைச் செய்துகொண்டிருக்கிறார்.
மேலும், கை வயிறு முதுகு தொடை கன்னம் உள்ளிட்ட பகுதிகளில் சிகிச்சை மேற்கொண்டுள்தோடு, பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்து கொண்டுள்ளார். இது குறித்து ஜாஸ்மைன் ஃபாரஸ்ட் கூறுகையில், ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கு பின்னும் இருபாலராலும் நான் சிறப்பாக நடத்தப்படுவதாகவும், அதே நேரம் தன்னுடைய தன்னம்பிக்கை அளவு உயர்ந்துள்ளதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு நாளில் நான் குளிப்பதற்கு முன்னர் இருமுறை என்னுடைய உடலை பார்ப்பேன். பல்துலக்கும்போது என்னுடைய முகத்தை பார்ப்பேன். அது என்னுடைய சுய மரியாதையை மேம்படுத்த உதவுகிறது. இந்த உலகம் கண்களால் பார்க்கக்கூடிய நம்முடைய உடலுக்கும் முகத்தும் செலவு செய்வது ஏற்புடையதுதான்’ என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9