Iran Blasts: ஈரானில் அடுத்தடுத்து பயங்கர குண்டுவெடிப்பு..73 போ் பலி; 170 போ் படுகாயம்!
ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியின் நினைவு தினத்தையொட்டி அவரது கல்லறை அருகே அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன.
ஈரானில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 73 பேர் பலியாகியுள்ளனர். 170-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய ஆளில்லா டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட ஜெனரல் காசிம் சுலைமானியின் நினைவு நாள் இன்று அந்த நாட்டில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில், அவரது கல்லறை அருகே ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்த கூடியிருந்தனர். அப்போது நடைபெற்ற நினைவு நாள் நிகழ்ச்சியின் போது இந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள கெர்மன் மாகாணத்தில் காசிம் சுலைமானி அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் அருகே இந்த குண்டுவெடிப்புகள் நடைபெற்று இருப்பதாகவும் இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமாா் 73 பேர் கொல்லப்பட்டனா். 170-க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்துள்ளனா்.
காசிம் சுலைமானியின் கல்லறை அருகே இந்த பயங்கர குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் காயமடைந்தனர்.
யார் இந்த காசிம் சுலைமானி
ஈரான் புரட்சிகர காவல்படையின் தலைவராக இருந்தவா் ஜெனரல் காசிம் சுலைமானி. கடந்த 2020 ஆம் ஆண்டு பாக்தாத் விமான நிலையத்திற்கு வெளியே அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் சுலைமான் கொல்லப்பட்டாா். அவரது இறப்பிற்கு பின்னர் ஈரானில் மரியாதைக்குரிய நபராக காசிம் சுலைமானி அறியப்படுகிறாா். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் வெளிநாட்டு நடவடிக்கை பிரிவான குத்ஸ் படையின் தலைவராகவும் அவா் செயல்பட்டுள்ளாா்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்