IS Attack: சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்! 18 பேர் சுட்டுக்கொலை - 50க்கும் மேற்பட்டோர் காணவில்லை
சிரியா பாலைவனத்தில் உணவு தேடலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 18 பேர் வரை ஐஎஸ் தீவிரவாகிகள் சுட்டுக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது
சிரியா அரசு ஆதரவு படைகளுக்கும், ஐஎஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளுக்கு இடையிலான மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 18 பேர் கொல்லப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
இறந்தவர்களில் நான்கு பேர் அரசுக்கு ஆதரவான அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஐஎஸ் அமைப்பினர் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மெஷின் கன் மூலமாக தீவிரவாத கும்பல், பாலைவனத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், ஏராளமான கார்களும் தீப்பற்ற வைக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளன.
உலகின் தரம் மிக்க ட்ரபிள் காளான்கள் சிரியா பாலைவனைத்தில் அதிகம் விளைகின்றன. சுமார் 13 ஆண்டுகளாக அங்கு நிலவி வரும் போர் சூழல் காரணமாக ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால் இதன் விலையானது பலமடங்கு அதிகரித்துள்ளது.
இதையடுத்து இந்த டர்பிள் காளான்களை சேகரிப்பதற்காக ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில், அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகளை மீறி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து, வடக்கு சிரிய பாலைவனத்தில் கண்ணிவெடிகள் தாக்குதலுக்கு மத்தியிலும் உணவு தேடலில் பலரும் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த மாதம் டர்பிள் தேடுதலின்போது கண்ணிவெடி தாக்குதலில் சுமார் 14 பேர் வரை கொல்லப்பட்டனர்.
கடந்த 2019இல், அமெரிக்கா உதவியுடன் ராணுவத்தின் தாக்குதலால் தனது சிரியா பகுதியை ஐஎஸ் அமைப்பை இழந்தபோதிலும், பாலைவனங்களில் அவ்வப்போது இதுபோன்ற தாக்குதல்களை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது.
பொதுமக்கள், குர்திஷ் தலைமையிலான படைகள், சிரிய அரசாங்க படைகள், ஈரான் சார்பு போராளிகள் மீது பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தி வரும் போக்கை ஐஎஸ் கடைப்பிடித்து வருகிறது. அத்துடன் அண்டை நாடான ஈராக் மீதும் தாக்குதல்களை நடத்துகிறது
கடந்த 2011 மார்ச் மாதம் டமாஸ்கஸின் கொடூரமான அடக்குமுறையால், அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுடன் சிரியாவின் போர் வெடித்தது. அப்போது இருந்து இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9