பயங்கரவாதிகள்- இந்திய இராணுவம் மோதல்: கமாண்டோ ஜந்து அலி ஷேக் பலி.. 2 பேர் படுகாயம்!
பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், துடு-பசந்த்கர் பகுதியை சுற்றி வளைத்த இராணுவத்தின் தேடுதல் நடவடிக்கையின் போது, துப்பாக்கிச் சூடு நடந்தது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். உதம்பூர் மாவட்டத்தின் துடு பசந்த்கர் பகுதியில் வியாழக்கிழமை காலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 6 பாராவைச் சேர்ந்த ராணுவ சிறப்புப் படை கமாண்டோ ஹவல்தார் ஜந்து அலி ஷேக் கொல்லப்பட்டார். மேலும் அவரது இரண்டு சகாக்கள் படுகாயமடைந்தனர்.
காவல்துறையுடன் இராணுவம் கூட்டு நடவடிக்கை
பயங்கரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சுற்றி வளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சூடு நடந்தது. குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் அடிப்படையில், உதம்பூரின் பசந்த்கர் பகுதியில் ஜம்மு காஷ்மீர் காவல்துறையுடன் கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டது என்று ஒயிட் நைட் கார்ப்ஸ் X இல் பதிவிட்டுள்ளது. கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்ததாக அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.
