Tamil News  /  Nation And-world  /  Amrit Pal Singh's Arrest Shuts Down Internet Services
கோப்புப்படம்
கோப்புப்படம்

யார் இந்த அமரித்பால் சிங்? இணையத்தை முடக்கும் அளவிற்கு இவர் செய்த வேலைய பாருங்க!

19 March 2023, 8:21 ISTPandeeswari Gurusamy
19 March 2023, 8:21 IST

தப்பி ஓடிய அமரித் பால் சிங்கை காவல்துறையினர் துரத்தி சென்று மெகத்பூர் பகுதியில் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் 78 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் சுமார் 500 பேரை தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.

பஞ்சாபில் பிரிவினைவாத தலைவரும் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவருமான அம்ரித்பால் சிங் மற்றும் அவரது உதவியாளர்களை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

பஞ்சாபை பிரித்து ‘காலிஸ்தான்’ என்ற தனி நாடு உருவாக்கும் நோக்குடன் இன்றும் ஏராளமானோர் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து இன்றும் சீக்கியர்கள் உதவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவரான அம்ரித் பால் சிங், தன்னைத் தானோ சீக்கிய மதகுரு என்று அறிவித்து கொண்டார்.

கடந்த மாதம் இவரது உதவியாளர் ஒருவரை கடத்தல் வழக்கில் அமிர்தசரஸ் புறநகர் காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து கத்தி மற்றும் துப்பாக்கி ஏந்திய தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தை அம்ரித் பால் சிங் முற்றுகையிட்டார். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அந்த சூழலில் பதற்றத்தை தவிர்க்க அம்ரித் பால் சிங் உதவியாளரை காவல்துறையினர் விடுதலை செய்தனர்.

இந்நிலையில் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை விவகாரத்தில் நிலைமை கை மீறி போவதை உணர்ந்த பஞ்சாப் காவல்துறையினர் அம்ரித் பால் சிங் மற்றும் அவரது உதவியாளர்களை கைது செய்ய திட்டமிட்டனர். நேற்று ஜலந்தர் மாவட்டம் மெகத்பூர் பகுதியில் பஞ்சாப் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

முன்னதாக, ஜலந்தரில் அவரை போலீஸார் கைது செய்ய முயன்றனர். ஆனால் இத்தகவலை முன்கூட்டியே அறிந்த அம்ரித்பால் சிங் ஒரு வாகனத்தில் தப்பிச் சென்றார். இதையடுத்து தப்பி ஓடிய அமரித்  பால் சிங்கை காவல்துறையினர் துரத்தி சென்று மெகத்பூர் பகுதியில் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் 78 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் சுமார் 500 பேரை தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.

எந்த வழக்கில் கீழ் அம்ரித்பால் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற விவரத்தை போலீஸ் அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை. எனினும் முகத்சர் நகரில் இருந்து இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மத ஊர்வலத்தை தொடங்க இருப்பதாக அம்ரித் பால் சிங் அறிவித்திருந்த நிலையில், போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

பஞ்சாபில் கலவரம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நண்பகல் 12 மணி வரை இணையதள சேவையை போலீஸார் முடக்கியுள்ளனர்.

அதே சமயம் மக்கள் அமைதி காக்க வேண்டும், புரளிகளை நம்ப வேண்டாம் எனவும் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளன.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்