Ambedkar: சமத்துவத்திற்காய் இந்த மண்ணில் உழைத்த மகத்தான தலைவர் அம்பேத்கர் நினைவு நாள்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ambedkar: சமத்துவத்திற்காய் இந்த மண்ணில் உழைத்த மகத்தான தலைவர் அம்பேத்கர் நினைவு நாள்!

Ambedkar: சமத்துவத்திற்காய் இந்த மண்ணில் உழைத்த மகத்தான தலைவர் அம்பேத்கர் நினைவு நாள்!

Pandeeswari Gurusamy HT Tamil
Dec 06, 2023 06:35 AM IST

அம்பேத்கரின் நினைவு நாளான இன்று அவர் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வதில் ஹிந்துஸ்தான் டைம் தமிழ் பெருமிதம் கொள்கிறது

அம்பேத்கர்
அம்பேத்கர் (PTI)

அவரது நினைவு நாளில் அவர் குறித்த சில தகவல்களை இங்கு திரும்பி பார்க்கலாம்.

பிறப்பு

பிரிட்டிஷ் இந்தியாவில் மத்திய பிரதேசம் பகுதியில் மாவ் என்ற இடத்தில் 1891ல் ஏப்ரல் 14 ல் பிறந்தார். அம்பேத்கரின் தந்தை ராம்ஜி மாலோஜி ஜக்பால் தாய் பீமா பாய். இந்த தம்பதியின் 14 வது குழந்தையாக பிறந்தார்.

ராம்ஜி ஜக்பால் இராணுவ பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். மகர் என்ற என்ற சமூகத்தில் பிறந்த இவரது பெயர் பீமா ராவ் ராம்ஜி. இளம் வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் பயணம் செய்யும் போது தாழ்த்தப்பட்ட சிறுவர் என்று தெரிந்ததும் மாட்டை அவிழ்த்து விட்டு குப்பை கொட்டுவது போல் இவரை கொட்டிய கொடுமை எல்லாம் நடந்தது.

கல்வி

1900 ம் ஆண்டு சாத்ராவில் உள்ள ஒரு பள்ளியில் தன் தொடக்க கல்வியை முடித்தார். உயர்நிலைபள்ளியில் சேர்ந்து பயின்றார். அங்கு தாழ்த்தப்பட்டவர் என்றதால் தனியாக அமர்த்தப்பட்டார். மற்ற மாணவர்களுடன் பேசவோ, விளையாடவோ கூடாது. அவர்களின் குறிப்பேடுகளையும் தொடமாட்டார்கள். தண்ணீர் வேண்டும் என்றாலும் யாராவது ஊற்றினால் கைஏந்தி பருக வேண்டும். அந்த மாணவர்கள் கோணிப்பையை தங்கள் வீட்டில் இருந்தே எடுத்து செல்ல வேண்டும். வட மொழி கற்க தடை. அது எல்லாம் இளம் வயதில் அம்பேத்கர் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதுவே பின்னாளில் தலித் மக்களின் உயர்வுக்காக அவரை உழைக்க தூண்டியது.

1904 ம் ஆண்டு அவரது குடும்பம் மும்பைக்கு குடியேறியது. அங்கு எல்பின்ஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் தனது கல்வியை தொடர்ந்தார். குடும்பத்தில் வறுமை சூழ்ந்த போதும் அம்பேத்கர் கல்வியில் அவரது குடும்பத்தினர் மிகவும் கவனமாக செயல்பட்டனர். மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார். இதை அடுத்து அவருக்கு ராமாபாய் என்ற என்னுடன் திருமணம் நடந்தது. கல்லூரியில் சேர்ந்து கல்வியை தொடர விரும்பிய அம்பேத்கருக்கு பரோடா மன்னர் நிதி உதவி புரிந்தார்.

சாதிக்கொடுமை அவரது கல்லூரி வரை நீடித்தது. ஆயினும் பேராசிரியர் முல்லர் என்பவர் அம்பேத்கரிடம் அனுசரணையாக நடந்ததோடு நூல்கள், உணவு மற்றும் உடைகளை தந்து உதவினார். இதை அடுத்து அம்பேத்கர் தனது பிஏ இளங்கலை பட்ட படிப்பை முடித்தார்.

பின்னர் பரோடா மன்னரின் அரண்மனையில் படைகளுக்கு தலைவராக லெப்டினன்ட் பதவியில் வேலைக்குச் சென்றார். ஆனால் சாதிய வேற்றுமையால் மனம் வெந்தார். மீண்டும் மும்பைக்கு விரும்பினார். பரோடா மன்னரை நேரில் சந்தித்து தான் வேலைக்கு வர இயலாத சூழ்நிலையை எடுத்துரைத்தார். 

மிகவும் வேதனை அடைந்த மன்னரோ கல்வியாளரான அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயில உரிய ஏற்பாடுகளை செய்து தந்தார். இதனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த அம்பேத்கர் உயர்கல்வி பயின்றவர் என்ற பெருமையை அந்த நாட்களில் பெற்றார். 

1913 ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் நாள் அம்பேத்கர் அமெரிக்காவிற்கு சென்று உயர்கல்வி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். 1915இல் பண்டைய இந்தியாவின் வாணிகம் என்ற ஆய்வுக்கு முதுகலை பட்டம் பெற்றார். இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார். இந்திய தேசிய பங்கு விகிதம் ஒரு வரலாற்று பகுப்பாய்வு என்ற தலைப்பில் பொருளாதார அடிப்படையாகக் கொண்ட ஆய்வு கட்டுரையும் வெளியிட்டார். 1921 முது அறிவியல் பட்டம் பெற்றார். ரூபாயின் பிரச்சனை என்ற ஆய்வுரைக்கு 1923 டி எஸ் சி பட்டம் பெற்றார் பெற்றார்.

அரசியல்

1920 இல் அரசியலில் நுழைந்தார் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக ஏராளமான கூட்டங்கள் மாநாடுகள் என ஓயாது உழைத்தார். 1927இல் சௌதார் குளத்தில் நீர் எடுக்கும் போராட்டத்திலும் மற்றும் கலாரம் கோயில் நுழைவு போராட்டத்திலும் வெற்றி கண்டார்.

1928ல் பம்பாய் சட்டப்பேரவைக்கு தேர்ந்கெடுக்கப்பட்டார். தீண்டாமை ஒழிப்புக்கான சட்டங்களை கொண்டு வந்தார்.

தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை, அவசர கால ஓய்வுகால உதவி பேன்றவைகளுக்காக வழிவகுத்தார்.

1930-32 லண்டன் வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொண்டு பழங்குடி மக்களுக்கு அரசியல் உரிமைக்காக தனி பிரதிநிதித்துவத்தை பெற்றார். அரசியல் சட்டத்தை எழுதினார்.

இப்படி தொடர்ந்து பல போராட்டங்களை எதிர்கொண்ட அம்பேத்தார் விடுதலை இந்தியாவின் அரசியல் நிர்ணயசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார்.

இந்து சட்ட தொகுப்பு மசோதாவிற்கு பாராளுமன்றத்தில் சட்டமாக்க ஆதரவு கிடைக்காததை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியை துறந்தார்.

1948 ஆம் ஆண்டு அம்பேத்கர் நீரிழிவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். இதனால் உட்கொண்ட மருந்துகள் அவருக்கு கண் பார்வையில் பிரச்சனையை ஏற்படுத்தியது. 1954 ஜூன் முதல் அக்டோபர் வரை படுக்கையிலேயே இருந்து வந்தார். இவரின் உடல் நலம் அரசியல் நிகழ்வுகளால் மென்மேலும் பாதிக்கப்பட்டது 1956 ஆம் ஆண்டில் டிசம்பர் ஆறாம் நாள் அம்பேத்கர் இயற்கை எய்தினார் அவரது நினைவு நாளான இன்று அவர் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வதில் ஹிந்துஸ்தான் டைம் தமிழ் பெருமிதம் கொள்கிறது

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.