Fact Check : YSRCP வாக்கெடுப்பில் 100% வெற்றி பெறும்’ என சந்திரபாபு நாயுடு கூறினாரா? வைரலாகும் வீடியோ.. நடந்தது என்ன?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Fact Check : Ysrcp வாக்கெடுப்பில் 100% வெற்றி பெறும்’ என சந்திரபாபு நாயுடு கூறினாரா? வைரலாகும் வீடியோ.. நடந்தது என்ன?

Fact Check : YSRCP வாக்கெடுப்பில் 100% வெற்றி பெறும்’ என சந்திரபாபு நாயுடு கூறினாரா? வைரலாகும் வீடியோ.. நடந்தது என்ன?

News checker HT Tamil
May 17, 2024 11:01 AM IST

Fact Check : ஆந்திர முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி மீண்டும் "100%" ஆட்சிக்கு வருவார் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளதாக வைரலாகும் வீடியோ.

YSRCP வாக்கெடுப்பில் 100% வெற்றி பெறும்’ என சந்திரபாபு நாயுடு கூறினாரா? வைரலாகும் வீடியோ.. நடந்தது என்ன?
YSRCP வாக்கெடுப்பில் 100% வெற்றி பெறும்’ என சந்திரபாபு நாயுடு கூறினாரா? வைரலாகும் வீடியோ.. நடந்தது என்ன?

ஆந்திரப் பிரதேசத்தில் 175 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றம் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 13 அன்று தேர்தல் நடைபெற்றது.

கூற்று

ஆந்திர முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி மீண்டும் "100%" ஆட்சிக்கு வருவார் என ஆந்திர சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளதாக வைரலாகும் வீடியோ.

உண்மையில் நடந்தது என்ன?

YSRCP வாக்கெடுப்பில் 100% வெற்றி பெறும்’ என சந்திரபாபு நாயுடு கூறினார் என வீடியோ ஒன்றை பகிர்ந்து எக்ஸ் தளத்தில் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

வைரலான பதிவு
வைரலான பதிவு

இதனை ஆராய்ந்த போது "செய்தியாளரின்" கேள்வி வைரலான வீடியோவில் மேலெழுந்திருப்பதை நியூஸ்செக்கர் கவனித்து , ஒலி அளவு, தெளிவு மற்றும் பின்னணி இரைச்சல் ஆகியவற்றில் உள்ள வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு, அது எடிட் செய்யப்பட்டதா என்ற சந்தேகத்தை எழுந்தது.

பின்னர் தொடர்புடைய முக்கிய வார்த்தை தேடலை நடத்தி போது அதாவது keyword வைத்து தேடிய போது, இது மே 13, 2024 தேதியிட்ட இந்த ANI ட்வீட்டிற்கு சென்றது, அங்கு எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அதே வீடியோ இருந்தது. அதில் மாநிலத்தில் தெலுங்கு தேசம் மீண்டும் ஆட்சிக்கு வருமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு நாயுடு 100% என பதிலளிப்பதை நாம் தெளிவாகக் கேட்கலாம். இது வைரலான வீடியோ மாற்றப்பட்டதை உறுதிப்படுத்துகிறது.

ANI 2வெளியிட்ட அந்த வீடியோவில், “குண்டூர்: ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு வாக்களித்த பின், "எங்கள் வாக்களிப்பதும், ஒளிமயமான எதிர்காலத்தைக் கோருவதும் நமது பொறுப்பு. 100% (மாநிலத்தில் டிடிபி ஆட்சிக்கு வரும்)" என்று கூறினார்.

ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மற்றும் #LokSabhaElections2024 இன் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று ஒரே நேரத்தில் நடைபெறுகிறது.” என இருந்தது.

முன்னதாக ஆந்திராவில் கடந்த திங்கள்கிழமை அதாவது மே 13 அன்று ஒரே கட்டமாக அனைத்து 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் மாதிரி நடத்தை விதிமுறை (எம்.சி.சி) குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் சுமார் 69% வாக்குகள் பதிவாகியது.

தேர்தல் ஆணையம் (இசி) தனது வாக்காளர் வாக்குப்பதிவு பயன்பாட்டில் இரவு 11 மணிக்கு வழங்கிய தரவுகளின்படி, மக்களவைத் தேர்தலின் ஒரு பகுதியாக 69.49% வாக்காளர்களும், தென் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலின் ஒரு பகுதியாக 69.61% வாக்காளர்களும் வாக்களித்தனர்.

பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட சித்தூர் மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக 77.50% வாக்குகளும், குறைந்தபட்சமாக விசாகப்பட்டினம் 60.3% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

பொறுப்புத் துறப்பு

இந்தச் செய்தி முதலில் News checker-இல் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.