தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  All You Need To Know About Indian Coast Guard, History, Significance

Indian Coast Guard Day 2024: இந்திய கடலோர காவல்படையின் வரலாறு, முக்கியத்துவம் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

Karthikeyan S HT Tamil
Feb 01, 2024 05:40 AM IST

இந்தியக் கடலோரக் காவல்படை (ICG) தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதன் முக்கியத்துவம் பற்றி இங்கு அறிவோம்.

இந்திய கடலோர காவல்படை தினம் 2024
இந்திய கடலோர காவல்படை தினம் 2024 (Indian Coast Guard X)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்திய கடல் எல்லைகளை பாதுகாப்பதில் கடலோர காவல் படையினரின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சுருக்கமாக ஐசிஜி (ICG) எனப்படும் இந்திய கடலோர காவல் படையானது, இந்திய கடல் எல்லைகளில் ஆண்டு முழுவதிலும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் ஒரு அமைப்பாகும்.

நமது தேசத்தின் கடல் எல்லைகளில் ரோந்து பணிகளை மேற்கொள்வது, போதைப் பொருள் கடத்தல்களை தடுப்பது, கடற்கரை சூழலியலை காப்பது, வேட்டையாடுபவர்களை பிடிப்பது மற்றும் மீனவர்களுக்கு உதவுவது போன்ற பணிகளை இந்த கடலோர காவல்படை மேற்கொண்டு வருகிறது.

வரலாறு

இந்திய கடற்படையுடன், இந்திய கடலோரக் காவல் படை இணைந்து செயல்பட்டு வந்தது. பின்னர், கடந்த 1977 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி இந்திய கடலோர காவல்படை தொடங்கப்பட்டது. கடல் வழியாக போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. ரோந்து மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை தடுப்பதற்கான பிரத்யேக அமைப்பாக இது உருவாக்கப்பட்டது.

1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி, இந்திய நாடாளுமன்றம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1 ஆம் தேதியை இந்திய கடலோர காவல்படை தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

நோக்கம்

இந்திய கடலோர காவல் படையின் எல்லை, இந்திய கடல் பகுதிக்கு மட்டும் உட்பட்டதாகும். நாட்டின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதிலும் தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் கடலோர காவல்படை அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

தொடக்கத்தில் இந்திய கடல் பகுதிகளில் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றுவதற்கும், குற்றவாளிகளை கைது செய்வதற்கும் இந்திய கடலோர காவல்படை பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர், போதைப்பொருள் கடத்தல்களை கண்காணிப்பது, கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை தடுப்பது, கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்பது, வணிக கப்பல்களுக்கு தேவையான பாதுகாப்புகளை அளிப்பது உள்ளிட்டவற்றை இப்படை பிரிவு தற்போது செய்து வருகிறது.

முக்கியத்துவம்

நாட்டின் கடல்சார் பொருளாதாரத்தின் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கும் தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் கடலோரக் காவல்படையின் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதாகவும் இந்த நாள் விளங்குகிறது. கடற்படையில் இருந்து இந்திய கடலோரக் காவல் படை தனியாகக் கட்டமைக்கப்பட்டு பிப்ரவரி 1, 1977 ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் இந்நாளில் இந்திய கடலோர காவல்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்