தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Cockroach Meal In Vistara Flight: உணவில் கரப்பான் பூச்சி - ஏர் விஸ்தாரா பயணி அதிர்ச்சி

Cockroach meal in vistara flight: உணவில் கரப்பான் பூச்சி - ஏர் விஸ்தாரா பயணி அதிர்ச்சி

Aarthi V HT Tamil
Oct 15, 2022 03:25 PM IST

விஸ்தாராவின் உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக பயணி ஒருவர் புகார் அளித்துள்ளார்.

உணவில் கரப்பான் பூச்சி
உணவில் கரப்பான் பூச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நிகுல் சோலங்கி என்ற பயணி, "ஏர் விஸ்தாரா உணவில் சிறிய கரப்பான் பூச்சி இருந்தது” எனப் பதிவிட்டு உள்ளார். சோலங்கி தனது உணவின் இரண்டு படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

அதில், இட்லி-சாம்பாருடன் சிறிது உப்மா இருக்கிறது. உப்மாவில், கரப்பான் பூச்சியை கண்டு அதிர்ச்சியடந்தார். அவரது பதிவுக்கு ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பதில் வந்தது.

இது குறித்து விஸ்தாரா வெளியிட்ட பதிவில், "வணக்கம் நிகுல், எங்கள் உணவுகள் அனைத்தும் மிக உயர்ந்த தரத்தை மனதில் வைத்துத் தயாரிக்கப்படுகின்றன.

உங்கள் விமான விவரங்களை DM மூலம் எங்களுக்கு அனுப்புங்கள், எனவே நாங்கள் விஷயத்தைப் பார்த்து, சிக்கலைத் தீர்க்கலாம். விரைவில், நன்றி" எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பின்னர், சோலங்கி தனது போர்டிங் பாஸை ட்வீட்டில் பகிர்ந்து விமான நிறுவனத்தைக் குறியிட்டார்.

விமான சேவைகள் குறித்து பயணி ஒருவர் புகார் கூறுவது இது முதல் முறை அல்ல.

முன்னதாக, ஒரு பயணி ஒரு ஜன்னல் இருக்கையை முன்பதிவு செய்திருந்தார், இருப்பினும் தங்களிடம் அது இல்லை என்பதைக் கண்டறிந்ததும், அவர்கள் வருத்தமடைந்து, அதைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்