மேம்பட்ட பராமரிப்பு மற்றும் செயல்பாடு.. 8 விமானங்களை ரத்து செய்த ஏர் இந்தியா.. எண்ணிக்கையும் குறைப்பு! முழு விவரம்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  மேம்பட்ட பராமரிப்பு மற்றும் செயல்பாடு.. 8 விமானங்களை ரத்து செய்த ஏர் இந்தியா.. எண்ணிக்கையும் குறைப்பு! முழு விவரம்

மேம்பட்ட பராமரிப்பு மற்றும் செயல்பாடு.. 8 விமானங்களை ரத்து செய்த ஏர் இந்தியா.. எண்ணிக்கையும் குறைப்பு! முழு விவரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jun 20, 2025 11:30 AM IST

271 உயிர்களைப் பலிகொண்ட ட்ரீம்லைனர் விபத்தில் இருந்து மீண்டு வரும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பரந்த செயல்பாட்டு நெருக்கடியின் ஒரு பகுதியாக இந்த விமான ரத்துகள் உள்ளன. ஏற்கனவே ஏர் இந்தியா நிறுவனம் 16 சர்வதேச வழித்தடங்களில் விமான எண்ணிக்கையை குறைத்துள்ளது.

மேம்பட்ட பராமரிப்பு மற்றும் செயல்பாடு.. 8 விமானங்களை ரத்து செய்த ஏர் இந்தியா.. எண்ணிக்கையும் குறைப்பு! முழு விவரம்
மேம்பட்ட பராமரிப்பு மற்றும் செயல்பாடு.. 8 விமானங்களை ரத்து செய்த ஏர் இந்தியா.. எண்ணிக்கையும் குறைப்பு! முழு விவரம் (Reuters File)

ஜூன் 12 அன்று ஏர் இந்தியா நிறுவனத்தின் ட்ரீம்லைனர் விபத்துக்குள்ளானதில் 270 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஒழுங்குமுறை ஆய்வு மற்றும் தொடர்ச்சியான பாதுகாப்பு சோதனைகள் அதிகரித்ததை அடுத்து இந்த ரத்து அறிவிப்பு வந்துள்ளது.

ஏர் இந்தியா விமானங்கள் ரத்து காரணமாக பாதிக்கப்பட்ட சர்வதேச வழித்தடங்களில் AI906 (துபாய் - சென்னை), AI308 (டெல்லி - மெல்போர்ன்), AI309 (மெல்போர்ன் - டெல்லி) மற்றும் AI2204 (துபாய் - ஹைதராபாத்) ஆகியவை அடங்கும்.

ஜூன் 20 அன்று ரத்து செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானங்கள்: முழு பட்டியல்

சர்வதேச விமானங்கள்

  • AI906: துபாய் முதல் சென்னை வரை
  • AI308: டெல்லி முதல் மெல்போர்ன் வரை
  • AI309: மெல்போர்ன் முதல் டெல்லி வரை
  • AI2204: துபாய் முதல் ஹைதராபாத் வரை

உள்நாட்டு விமானங்கள்

  • AI874: புனே முதல் டெல்லி வரை
  • AI456: அகமதாபாத் முதல் டெல்லி வரை
  • AI2872: ஹைதராபாத் முதல் மும்பை வரை

நெருக்கடியை எதிர்கொள்ளும் ஏர் இந்தியா

இந்த விமான ரத்துகள், அகமதாபாத் - லண்டன் கேட்விக் ட்ரீம்லைனர் விபத்தில் இருந்து இன்னும் மீண்டு வரும் ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு ஒரு பரந்த செயல்பாட்டு நெருக்கடியின் பகுதியாகும், இந்த விபத்தின் காரணமாக சுமார் 271 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானக் குழு முழுவதும் விரிவான பாதுகாப்பு ஆய்வுகளுக்கு உத்தரவிட்டது.

DGCA தரவுகளின்படி, விபத்துக்குப் பிறகு, 66 ட்ரீம்லைனர் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜூன் 12 அன்று மட்டும், ட்ரீம்லைனர் இயக்கப்படும் 50 விமானங்களில் ஆறு விமானங்கள் தரையிறக்கப்பட்டன. ஜூன் 18ஆம் தேதி நிலவரப்படி, ஏர் இந்தியாவின் 33 ட்ரீம்லைனர்களில் 24 விமானங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், வரும் நாட்களில் மேலும் பல விமானங்கள் மதிப்பாய்வு செய்யப்பட உள்ளதாகவும் ஒழுங்குமுறை அமைப்பு உறுதிப்படுத்தியது. பராமரிப்பு சிக்கல்கள் காரணமாக டெல்லியில் இரண்டு ஜெட் விமானங்கள் தற்போது AOG (விமானம் தரையில்) என பட்டியலிடப்பட்டுள்ளன.

இன்றைய ரத்துகள் இந்த வாரம் தரையிறக்கப்பட்ட விமானங்களின் அதிகரித்து வரும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த செவ்வாய் கிழமை, அகமதாபாத் - லண்டன் வழித்தடத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட AI-159 (முன்னர் AI-171) உட்பட ட்ரீம்லைனர் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சர்வதேச விமானங்கள் எண்ணிக்கை குறைப்பு

முன்னதாக, வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் கிழக்கு நாடுகளை இணைக்கும் 16 சர்வதேச வழித்தடங்களில் விமானங்களைக் குறைப்பதாகவும், ஜூன் 21 முதல் ஜூலை 15 வரை மூன்று வழித்தடங்களை நிறுத்துவதாகவும் ஏர் இந்தியா வியாழக்கிழமை தெரிவித்தது.

விமானப் பயணத்துக்கு முந்தைய பாதுகாப்பு சோதனைகளை தானாக முன்வந்து மேற்கொள்வதோடு, மத்திய கிழக்கில் வான்வெளி மூடல்களால் ஏற்படும் கூடுதல் விமான கால அளவையும் ஈடுகட்ட முடிவு செய்ததால் இந்த குறைப்பு ஏற்பட்டதாக டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. "நேர அட்டவணை நிலைத்தன்மையை மீட்டெடுப்பதும், பயணிகளுக்கு கடைசி நிமிட சிரமத்தைக் குறைப்பதும் இதன் நோக்கமாகும்" என்று விமான நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டிருந்தது.

டெல்லி - நைரோபி, அமிர்தசரஸ் - லண்டன் (கேட்விக்) மற்றும் கோவா (மோபா) - லண்டன் (கேட்விக்) ஆகியவை ஜூலை 15 வரை விமானங்கள் நிறுத்தப்படும் மூன்று வழித்தடங்களாகும்.

வியாழக்கிழமை அறிக்கையில், மாற்றங்கள் காரணமாக பாதிக்கப்படும் ஐந்து வட அமெரிக்க வழித்தடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. டெல்லி - டொராண்டோ வாரத்துக்கு 13க்கு பதிலாக ஏழு முறை இயக்கப்படும் என்றும், டெல்லி - வான்கூவர் வாரத்துக்கு ஏழு முறையிலிருந்து ஐந்து முறை இயக்கப்படும் என்றும், டெல்லி - சான் பிரான்சிஸ்கோ பத்தில் இருந்து ஏழு முறையாகவும், டெல்லி - சிகாகோ ஏழில் இருந்து மூன்றாகவும், டெல்லி -வாஷிங்டன் வாராந்திர விமானங்கள் ஐந்து முதல் மூன்று முறையாகவும் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் எட்டு வழித்தடங்களாக விமான நிறுவனம் குறைப்புகளை அறிவித்துள்ளது. டெல்லி - லண்டன் ஹீத்ரோ விமானங்கள் தற்போதுள்ள 24 விமானங்களுக்கு பதிலாக ஒவ்வொரு வாரமும் 22 விமானங்களை இயக்கும், பெங்களூரு - லண்டன் ஹீத்ரோ விமானங்கள் ஏழு விமானங்களுக்கு பதிலாக ஆறு விமானங்களை இயக்கும், அமிர்தசரஸ் மற்றும் டெல்லி முதல் பர்மிங்காம் வரை மூன்று விமானங்களுக்கு பதிலாக இரண்டு விமானங்கள் இயக்கப்படும், டெல்லி - பாரிஸ் 14 விமானங்களுக்கு பதிலாக 12 விமானங்கள் இயக்கப்படும், டெல்லி - மிலன் ஏழு விமானங்களுக்கு பதிலாக நான்கு விமானங்கள் இயக்கப்படும், டெல்லி - கோபன்ஹேகன் ஐந்து விமானங்களுக்கு பதிலாக மூன்று விமானங்கள் இயக்கப்படும், டெல்லி - வியன்னா நான்கு விமானங்களுக்கு பதிலாக மூன்று விமானங்கள் இயக்கப்படும், டெல்லி - ஆம்ஸ்டர்டாம் ஏழு விமானங்களுக்கு பதிலாக வாரத்துக்கு ஐந்து விமானங்கள் இயக்கப்படும்.

டெல்லி - மெல்போர்ன் மற்றும் டெல்லி - சிட்னி வழித்தடங்களில் ஏழு விமானங்களுக்கு பதிலாக ஐந்து விமானங்கள் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.