தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ai Technology: இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! முதல் முறையாக Ai வளையத்தில் அரசு பள்ளிகள் மொத்த செயல்பாடு

AI Technology: இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! முதல் முறையாக AI வளையத்தில் அரசு பள்ளிகள் மொத்த செயல்பாடு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 19, 2024 08:13 AM IST

முதல் முறையாக யூனியன் பிரதேசங்களுக்கான கல்வித்துறை ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யு AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளது. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ஆசிரியர்களின் இருப்பிடத்தையும், பள்ளி நேரத்தில் அவர்கள் வகுப்பறைக்குள் செல்லும் நேரத்தையும் கண்காணிக்கப்பட உள்ளது.

சண்டிகரில் அரசு பள்ளிகள் செயல்பாட்டை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
சண்டிகரில் அரசு பள்ளிகள் செயல்பாட்டை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து செயற்கை நுண்ணறிவு செயலி மூலம் அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்படுகிறது. இதற்காக முகத்தை அடையாளம் காணும் விதமாக AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் இருந்தவாறு மட்டுமே தங்களது வருகையை பதிவு செய்ய முடியும்.

இந்த செயலி மூலம் ஆசிரியர்கள் சரியான நேரத்தில் செயல்படுகிறார்களா, பள்ளி நேரத்தில் வேறு எங்கும் செல்லாமல் பள்ளியில் தான் இருக்கிறார்களா என்பதை கண்காணிக்க முடியும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக யூனியன் பிரதேசம் பள்ளி கல்வித்துறை இயக்குநர் ஹர்சுஹிந்தர்பால் சிங் ப்ரார் கூறியதாவது, " ஆசிரியர்கள் வருகை, செயல்பாடு தொடர்பாக எந்த புகாரும் இல்லாவிட்டாலும், கால மாற்றத்துக்கு ஏற்ப இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு அமைப்பதற்கு சிஎஸ்ஆர் (கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு) நிதியை பயன்படுத்துகிறது. ஏப்ரல் 2024க்குள் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்" என்றார்.

பள்ளிகளில் முதல் முறையாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கும் நிலையில், பஞ்சாப் அரசாங்கம் இந்த செயற்கை நுண்ணறிவு திட்டத்தை பல்வேறு துறைகளில் ஏற்கனவே நடைமுறைபடுத்தி, அவை செயல்பாட்டிலும் இருந்து வருகிறது.

இந்த செயற்கை நுண்ணறிவு திட்டம், மதிய உணவின் தரம், பள்ளிகளில் நிலவும் தூய்மை ஆகியவையும் கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, " மதிய உணவை தயார் செய்யும் பணியாளர்கள், உணவுகள் தயாரான பிறகு அதை கிச்சனில் வைத்து புகைப்படமாக எடுக்க வேண்டும். அதே போல் அந்த உணவு மாணவர்களுக்கு பரிமாறப்படும் முன்னரும் பள்ளியில் பொறுப்பாளர்கள் உணவுகளை புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும்.

இதில் உணவுகளின் தரம் குறைவாக இருந்தால், பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளிக்கப்படும். இதை போல் பள்ளி வளாகத்தின் தூய்மையும் கண்காணிக்கபட இருக்கிறது. குறிப்பாக கழிப்பிடங்கள், பாத்ரூம்களின் சுத்ததன்மை கவனிக்கப்படும்.

கழிவறைகளின் புகைப்படங்களை நாள்தோறும் பள்ளி நிர்வாகம் அனுப்ப வேண்டும். இதில் தூய்மை இல்லாமலும், நன்கு பராமரிக்கப்படாத கழிவறைகள் AI தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்