Tamil News  /  Nation And-world  /  Adani Group Shares Fall Sharply Due To Hindenburg Probe Report

Adani: சாவு பயத்தை காட்டிட்டாங்க பரமா! 50000 கோடி இழப்பை சந்தித்த அதானி நிறுவனம்

Kathiravan V HT Tamil
Jan 25, 2023 07:02 PM IST

தவறான தகவல் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கொண்ட தீங்கு விளைவிக்கும் கலவை என இந்த அறிக்கை குறித்து அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி, ஜுகேஷிந்தர் சிங் கருத்து தெரிவித்துள்ளர்

கௌதம் அதானி, அதானி குழுமங்களின் தலைவர் - கோப்புபடம்
கௌதம் அதானி, அதானி குழுமங்களின் தலைவர் - கோப்புபடம் (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

அதானி குழுமம் பங்குச்சந்தையில் ஏராளமான மோசடி வேலைகளை செய்துள்ளதாக ஹிண்டன் பர்க் அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. அதானி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள், அதிகாரிகள், பங்குதாரர்கள் என பலரிடம் கருத்துகளை ஆய்வு செய்த பின்னரே அதானி குழுமம் குறித்த இந்த தகவல்களை வெளியிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதானி நிறுவனங்களுக்கு உள்ள கணிசமான கடன் ஒட்டுமொத்த குழுமத்தையும் பாதுகாப்பான நிதிநிலையில் வைத்துள்ளதாகவும், அதானி குழுமத்தின் 7 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் அடிப்படை அடிப்படையில் 85% பின்னடைவைக் கொண்டுள்ளன என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த ஆண்டு மார்ச் 31இல் முடிவடைந்த நிதியாண்டு வரை அதானி குழுமத்தின் மொத்த கடன்கள் 40% வரை அதிகரித்து 2.2 ட்ரில்லியன் ரூபாயாக உள்ளது. இந்த அறிக்கையின் எதிரொலியாக அதானி நிறுவன கட்டுப்பாட்டில் உள்ள ஏசிசி மற்றும் அம்புஜா நிறுவன பங்குகள் 7 சதவீதம் வரையும், அதானி போர்ட் பங்குகள் 6.3 சதவீதமும் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவன பங்குகள் 1.5% வரையும் சரிவை சந்தித்துள்ளன.

அதானி குழும நிறுவனங்களில் முன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் நாளையதினம் நாட்டின் மிகப் பெரிய பொது இரண்டாம் நிலை பங்குச் சலுகையை அறிமுகப்படுத்த திட்டமிடுள்ளது. இத மூலம் மூலதனச் செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கும் சில கடனை அடைப்பதற்கும் சுமார் 2.5 பில்லியன் டாலராக உயர்த்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிக்கையால் அதானி நிறுவனம் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், தவறான தகவல் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கொண்ட தீங்கு விளைவிக்கும் கலவை என இந்த அறிக்கை குறித்து அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி, ஜுகேஷிந்தர் சிங் கருத்து தெரிவித்துள்ளர். அதானி குழுமம் எப்போதும் அனைத்து சட்டங்களுக்கும் இணங்குவதாகவும், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடமிருந்து வரவிருக்கும் பொதுப் பங்களிப்பை சேதப்படுத்தும் நோக்குடன் அதானி குழுமத்தின் நற்பெயரை குறைக்கும் வெட்கக்கேடாடன அறிக்கை எனவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

WhatsApp channel

டாபிக்ஸ்