Kangana Ranaut: நடிகை கங்கனாவின் கன்னத்தில் பளார் விட்ட பெண் காவலர்.. சண்டிகர் விமான நிலையத்தில் நடந்தது என்ன?
Kangana Ranaut slapped: இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் இருந்து மக்களவைக்கு முதல் முறையாக நடிகை கங்கனா ரனாவத் தேர்வாகியுள்ள நிலையில் சண்டிகர் விமான நிலையத்தில் நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத் வியாழக்கிழமை சண்டிகர் விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அங்கிருந்த துணை ராணுவமான மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த (CISF) பெண் காவலர் ஒருவருக்கும், நடிகை கங்கனாவிற்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அந்த பெண் காவலர் அறைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தகவல் படி, சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின் போது தனது தொலைபேசியை தட்டில் வைக்க மறுத்ததை அடுத்து, இந்த வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கங்கனா ரனாவத் விஸ்தாரா விமானம் மூலம் மதியம் 3 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
நடந்தது என்ன?
சண்டிகர் விமான நிலையத்தில் பாஜக எம்.பி. நடிகை கங்கனா ரனாவத்தை, மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர், கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போராடிய விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என கங்கனா ரனாவத் கூறியிருந்தற்காக பெண் காவலர் அறைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மோதல் உண்மையா?
நடிகை கங்கனா ரனாவத் மற்றும் துணை ராணுவ வீரர் இடையிலான மோதல் குறித்த தகவல்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விரைவில் கங்கனா ரனாவத் தரப்பினர் இதுபற்றி விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் அரசியல் பயணம்
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் இருந்து மக்களவைக்கு முதல்முறையாக தேர்வு செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு கங்கனா ரனாவத் மீதான தாக்குதல் நடந்துள்ளது. தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா, காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்யா சிங்கை 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்று தேர்தல் ஆணைய வலைத்தளம் தெரிவித்துள்ளது.
சினிமாவை கடந்து அரசியல் பயணத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ரனாவத் 5,37,022 வாக்குகளைப் பெற்றார்.
13,77,173 வாக்காளர்களைக் கொண்ட மண்டி மக்களவைத் தொகுதியில் 10 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 73.15 சதவீத வாக்குகள் பதிவாகின.
கங்கனாவின் பதிவு
"இந்த அன்பு மற்றும் நம்பிக்கைக்காக மண்டியின் அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த நன்றி ... இந்த வெற்றி உங்கள் அனைவருக்கும் சொந்தமானது, இது பிரதமர் மோடி மற்றும் பாஜக மீதான உங்கள் நம்பிக்கையின் வெற்றி, இது சனாதனின் வெற்றி மற்றும் மண்டியின் மரியாதை" என்று அவர் தனது வெற்றி அறிவிக்கப்படுவதற்கு முன்பே சமூக ஊடகங்களில் எழுதினார்.
சினிமா என்ட்ரி
அனுராக் பாசுவின் 2006 ஆம் ஆண்டு வெளியான "கேங்ஸ்டர்" படத்தின் மூலம் தனது 17 வயதில் அறிமுகமான ரனாவத், 'குயின்', 'தனு வெட்ஸ் மனு', 'தனு வெட்ஸ் மனு', 'தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்', 'மணிகர்னிகா', 'ஃபேஷன்' மற்றும் 'பங்கா' போன்ற படங்களில் தனது நடிப்பால் பாராட்டுக்களைப் பெற்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வெளிப்படையான ஆதரவாளராக இருந்து வருகிறார் ரனாவத். மேலும் 2019-20 ஆம் ஆண்டில் குடியுரிமை (திருத்த) சட்டம் மற்றும் விவசாயிகள் போராட்டங்கள் போன்ற பிரச்சினைகளில் வெளிப்படையாக தனது கருத்துக்களை தெரிவித்தார். மேலும், உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவிலும் அவர் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்