Acid attack: மங்களூரில் 3 மாணவிகள் மீது அமில வீச்சு-ஒருவர் கைது
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Acid Attack: மங்களூரில் 3 மாணவிகள் மீது அமில வீச்சு-ஒருவர் கைது

Acid attack: மங்களூரில் 3 மாணவிகள் மீது அமில வீச்சு-ஒருவர் கைது

Manigandan K T HT Tamil
Mar 04, 2024 01:42 PM IST

மூன்று மாணவிகள் மீது ஆசிட் வீசப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகத்தில் 3 மாணவிகள் மீது அமில வீச்சால் பரபரப்பு
கர்நாடகத்தில் 3 மாணவிகள் மீது அமில வீச்சால் பரபரப்பு

தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகாவில் உள்ள அரசு பட்டப்படிப்பு கல்லூரி ஆவரனாவில் இன்று (மார்ச் 4, திங்கள்) காலை மூன்று மாணவிகள் மீது ஆசிட் வீச்சு சம்பவம் நடந்துள்ளது. கல்லூரி வளாகத்தில் மாணவி மீது நபர் ஒருவர் ஆசிட் வீசினார். அப்போது அருகில் இருந்த மேலும் இரு மாணவிகளையும் ஆசிட் தாக்கியது. காயமடைந்த மூன்று மாணவிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் கேரளாவின் மல்லாபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை மற்ற மாணவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். குற்றம் சாட்டப்பட்டவரும், ஆசிட் தாக்கப்பட்ட மாணவியும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காதல் தோல்வியின் பின்னணியில் குற்றம் சாட்டப்பட்டவர் இந்த செயலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து விஜயப்பூர் எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால் தனது ட்விட்டர் பக்கத்தில், “தென் கன்னடா மாவட்டம் கடபாவில் உள்ள அரசு கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதற்கான பிரதிபலிப்பாகும். மாநிலம் முற்றிலுமாக உடைந்து, அரசு ஊழலில் சிக்கியுள்ளது. காயமடைந்த மாணவிகள் ஆபத்தில் இருந்து தப்பிக்க நான் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.