Chandigarh Mayor: சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளரே வெற்றி! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Chandigarh Mayor: சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளரே வெற்றி! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Chandigarh Mayor: சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளரே வெற்றி! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Kathiravan V HT Tamil
Feb 20, 2024 05:33 PM IST

Chandigarh Mayor: தேர்தல் அதிகாரி அனில் மாசிஹ் மீது வழக்கு தொடர உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், மனுதாரரும் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமாரை சண்டிகர் மேயராக அறிவித்து உத்தரவு

ஆம் ஆத்மி கவுன்சிலர் குல்தீப் குமாரை சத்தீஸ்கர் மேயராக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது
ஆம் ஆத்மி கவுன்சிலர் குல்தீப் குமாரை சத்தீஸ்கர் மேயராக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது (PTI)

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற பெஞ்ச் தனது உத்தரவில், "மனுதாரர் சண்டிகர் மாநகராட்சியின் மேயர் பதவிக்கு செல்லுபடியாகும் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்" என தெரிவித்துள்ளது. 

பஞ்சாப் மற்றும் சண்டிகர் பிரதேசத்திற்கு தலைநகராக உள்ள சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் போட்டியிட்டன.

இந்த தேர்ததில் அனில் மாசிஹ் என்பவர் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். அப்போது மேயர் தேர்தலுக்காக வாக்களித்த கவுன்சிலர்களின் வாக்கு சீட்டுகளை செல்லாது என அறிவித்து பாஜக வெற்றி பெற்றதாக அறிவித்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெறது. அதில், அடையாளங்களைச் செய்வதன் மூலம் செல்லாததாகக் கருதப்பட்ட எட்டு வாக்குகளையும், மனுதாரருக்கான எட்டு வாக்குகளை எண்ணினால் அவருக்கு 20 வாக்குகள் கிடைக்கும். தலைமை தாங்குபவரின் தேர்தல் முடிவை ரத்து செய்ய உத்தரவிடுகிறோம். சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது" என்று தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்தார்.

அனில் மாசிஹ் பற்றி உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

ஜனவரி 30 சண்டிகர் மேயர் தேர்தலை நடத்தியதில் கடுமையான தவறுகளைக் கண்டறிந்த பின்னர் தேர்தல் அதிகாரி அனில் மாசிஹ் மீது வழக்குத் தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனில் மாசிஹ் மீது உச்ச நீதிமன்றத்தால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் பொய் சொன்னதற்கு அனில் மாசிஹ் பொறுப்பேற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. 

சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது என்ன?

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்ததை அடுத்து பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது.

பாஜகவின் மனோஜ் சோன்கர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குல்தீப் குமாரை 16 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் 12 வாக்குகளும் பெற்று மேயர் பதவிக்கு போட்டியிட்டனர். இருப்பினும், சோன்கர் பின்னர் ராஜினாமா செய்தார். அதே நேரத்தில் மூன்று ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் பாஜகவுக்கு தாவியது குறிப்பிடத்தக்கது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.