Satyendar Jain Hospitalized: திகார் சிறை பாத் ரூமில் வழுக்கி விழுந்த சத்யேந்திர ஜெயின்-தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
Satyendar Jain: தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் சிறை பாத் ரூமில் மயக்கமடைந்து கீழே வழுக்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சுவாசக் கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஊழல் வழக்கில் திகார் சிறையில் இருந்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மூன்னாள் அமைச்சருமானவர் தான் சத்யேந்திர ஜெயின்.
சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி வந்தார். இந்நிலையில், இன்று அவர் திகார் சிறை பாத் ரூமில் வழுக்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் அவர் காயமடைந்தார். அதைத் தொடர்ந்து தீன தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் லோக் நாயக் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.