Tamil News  /  Nation And-world  /  A Teacher Physical Abused Students By Taking Them As A Special Class In Bihar
பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

Crime : ’சிறப்பு வகுப்பு இருக்கு வாங்க’ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்.. வீடியோக்கள் எடுத்து மிரட்டல்!

27 May 2023, 7:06 ISTDivya Sekar
27 May 2023, 7:06 IST

பீகாரில் சிறப்பு வகுப்பு என மாணவிகளை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மற்றும் உடந்தையாக இருந்த மனைவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு இரண்டு மாணவிகள் சென்று புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் தங்களை தனியார் பள்ளி ஆசிரியர் அமித்குமார் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கூறியிருந்தனர். இந்த புகாரையடுத்து விசாரணை நடத்திய போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

தனியார் பள்ளி ஆசிரியரான அமித்குமார் தன்னிடம் சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறுவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும், மாணவிகளிடம் பாலியல் அத்துமீறுவதை வீடியோ பதிவு செய்து கொள்வாராம். பின்னர் அந்த வீடியோக்களை காண்பித்து மாணவிகளை மிரட்டி தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று அங்கும் அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுபோல பல மாணவிகளை அமித்குமார் பாலியல் ரீதியாக துன்புறுத்திருக்கிறாராம். இதில் அமித்குமாரின் இந்த செயலுக்கு அவரது மனைவி சாஹிபா உடந்தை.

மேலும் காவல்துறை நடத்திய விசாரணையில் மற்றொரு அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. தனியார் விடுதியில் மாணவிகளுடன் அமித்குமார் பாலியல் தொடர்பில் இருப்பதை அமித்குமாரின் உதவியுடன் அந்த விடுதியின் மேலாளர் வினோத்குமார் குப்தா வீடியோவாக பதிவு செய்து வைத்துக் கொண்டது தெரிய வந்ததுள்ளது.

இதனையடுத்து பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை லக்கிசராய் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஷன் குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வீடியோக்கள், லேப்டப் உள்ளிட்ட பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், அமித்குமார், அவரது மனைவி சாஹிபா குமாரி மற்றும் தனியார் விடுதி மேலாளர் வினோத்குமார் குப்தா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்